ஷிரின் எபாடி - நேர்காணல்
https://www.972mag.com/iran-women-protests-shirin-ebadi/ ஈரானுக்கு மக்களாட்சி பெண்கள் மூலம் வந்துசேரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஷிரின் எபாடி, ஈரானில் நடைபெறும் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் அங்கு நடைபெறும் இஸ்லாமியக் குடியரசின் வீழ்ச்சியின் தொடக்கத்துக்கான முன்னறிவிப்பு என்கிறார். மூலம்: ஓர்லி நோய் | அக்டோபர் 6, 2022 செப்டம்பர் 29, 2022 அன்று, மெல்போர்னில், ஈரானியப் போராட்டங்களுக்குத் துணை நிற்கும் வகையில் ஒரே வாரத்தில் இரண்டாவதாக இன்னொரு பேரணிக்காக மக்கள் ஒன்று கூடினார்கள். (Matt Hrkac/CC BY 2.0) இந்த கட்டுரை லோக்கல் கால் (Local Call) இதழுடன் இணைந்து வெளியிடப்பட்டது. சமீப வாரங்களில் ஈரானில் பொங்கி எழுந்துகொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து வெள்ளம் போல் வெளிவரும் புகைப்படங்கள், காணொளிகளோடு சேர்ந்து எண்ணற்ற கொத்துக்குறிகளும் (hashtags) வந்துள்ளன. அவற்றுள் முதன்மையானது, #மஹ்சா_அமினி — 22 வயதான குர்தியப் பெண்ணின் பாரசீகப் பெயர் (அவரது உண்மையான குர்தியப் பெயர் ஜினா/ஜினா அமினி), அவர் செப்டம்பர் 14 அன்று "முறையற்ற வகையில் ஹிஜாப்" அணிந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்