இடுகைகள்

டிசம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாதக்கார இந்தியன் (THE ARGUMENTATIVE INDIAN)

அமர்த்தியா சென் நடப்புச் செய்திகளில் அதிகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. நோபல் பரிசு வென்ற இந்தியர் என்ற முறையில் நம்மவர்கள் அவருக்குச் செய்த மரியாதை அது. அப்படியான காலத்தில் அவரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப்போட்டுவிட்டு அதன் பின்பு பல ஆண்டுகள் அட்டையைக்கூடத் திறந்து பார்க்கவில்லை. பொருளியல் மேதை என்றால் ஏதோ உற்பத்தி, பயன்பாடு, வளம் என்று மட்டுமே பேசத் தெரிந்தவராக இருப்பார் என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அப்போதைய அறிவு இருந்தது. “என்னைப் போல் உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் இந்தியர்கள்” என்று நக்கலடித்திருப்பார் என்றுதான் நூலை வாங்கும்போது எண்ணினேன். நாம் நினைப்பது போலவே நினைப்பவராக இருந்தால் அவர் எப்படி நோபல் பரிசு பெற்றிருக்க முடியும்! நூல் முழுக்க இந்தியர்களின் உரையாடல் மரபு பற்றிப் பேசுகிறார். அதாவது, இந்தியர்களின் மக்களாட்சி மீதான மரியாதை பற்றியும் மூடிய மனதோடும் சொந்தக் கருத்துகளில் பிடிவாதத்தோடும் இராமல் எதையும் வெளிப்படையாக உரையாடுகிற பண்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்தியர