இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் அரசியற் திறனாய்வு மரபு

  தமிழ் அரசியற் திறனாய்வு மரபு  அதிகாரத்தைக் கேள்வி கேட்ட நாகரிகம், காட்சியாக மாறிவிட்ட அரசியலை இன்று எப்படி எதிர்கொள்கிறது? முன்னுரை: ஒரு நாகரிகத்தின் நினைவிழப்பு பற்றிய கதை ஒவ்வொரு சமூகமும் தன்னைப் பற்றிச் சில அடிப்படை நம்பிக்கைகளை வைத்திருக்கிறது. சில சமூகங்கள் தங்களைப் போர்வீரர்களின் சந்ததியென நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை வணிக நாகரிகம் என நினைக்கின்றன. சில சமூகங்கள் தங்களை அறிவியல், காரண-ஏரணத்தின் (logic) வாரிசுகள் எனக் கருதுகின்றன. அந்த வகையில், தமிழ்ச் சமூகத்தை எந்த அடிப்படைப் பண்பால் அடையாளம் காண்பது? இக்கேள்விக்கான பதிலை வரலாற்றின் நீண்ட நதிக்குள் தேடிச் சென்றால், ஒரு தனித்துவமான உண்மை நமக்குத் தென்படும். தமிழர்கள் வெறும் அரசுகளை உருவாக்கியவர்கள் அல்லர். வெறும் பேரரசுகளை நிறுவியவர்கள் அல்லர். வெறும் மன்னர்களின் வரலாற்றை எழுதியவர்களும் அல்லர். தமிழர்கள், வரலாற்றின் மிக நீண்ட மரபுகளில் ஒன்றாக அதிகாரத்தை எப்போதும் கேள்விக்குட்படுத்தியவர்கள். அதிகாரத்தைப் புனிதப்படுத்தாமல், அதை அறத்தின் அளவுகோலில் அளந்து பார்த்தவர்கள். இதுவே தமிழ் நாகரிகத்தின் மிக ஆழமான பண்புகளில் ஒன...

விவான் சுந்தரம் - நேர்காணல்

  நேர்காணல் செய்பவர்: காமாயனி சர்மா மே 2019 விவான் சுந்தரம் - நேர்காணல் நான் விவான் சுந்தரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது, ​​அவர் 2018-இல் முன்சென் ஹவுஸ் டெர் குன்ஸ்ட்டில் நடந்த துண்டித்தல்கள் (DISJUNCTURES) என்ற அவரது ஆய்வுக் கண்காட்சியின் அட்டவணையை வெளியே எடுத்து, அதில் கையெழுத்திட்டு எனக்குப் பரிசளித்தார். பல ஊடகங்களிலும் காலகட்டங்களிலும் பாவும் அவரது படைப்புகளின் தன்மைக்கு அந்தத் தலைப்பு பொருந்துகிறது. அவரின் இந்தச் சைகை, இந்தியக் கலைக் களத்தில் ஐம்பது ஆண்டுகளாக அவரது செல்வாக்கை நிலைநிறுத்த உதவிய பெருந்தன்மை, உற்சாகம், பெருமை ஆகிய அனைத்துப் பண்புகளையும் கொண்ட அந்த மனிதருக்குப் பொருந்துகிறது. 75 வயதிலும், சுந்தரம் ஒரு செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார். அவரது அலுவலகத்தில் அமர்ந்து, அவரது செயல்பாடுகள் அனைத்தையும் இணைக்கும் ஒற்றைத் தத்துவ இழை என்று ஏதேனும் இருக்கிறதா என்று விவாதிக்கிறோம். அவர், தான் எப்பொழுதும் தனக்கு வெளியே நடக்கும் ஏதோவொன்றிற்கு - ஒரு குறிப்பிட்ட நெருக்கடிக்குப் பதிலளிப்பதாக மறுப்புரைக்கிறார். ஆனாலும் அவர் தன் சொந்த வாழ்வில் இருந்து எடுத்துக்க...

ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்: ஐயங்கள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும். இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. “பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாண்ட வி...