இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உலகம் சமநிலை பெற வேண்டும்?!

படம்
"உலகம் சமநிலை பெற வேண்டும்; அதில் உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்!" என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் இது சாத்தியமா என்றொரு கேள்வி உடனடியாக வந்து எதிர்மறைச் சிந்தனை கொடுக்கும். இதை இரண்டாகப் பிரிக்கலாம். உலகில் உள்ள எல்லா மனிதரும் சமமாக வேண்டும் என்பது ஒன்று. உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் சமமாக வேண்டும் என்பது இன்னொன்று. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையே என்றாலும் இரண்டுமே சிரமம்தான். ஆனால், அதற்கு எல்லா வகையிலும் எல்லோரும் சமமாக வேண்டும் என்பதல்ல பொருள். வேற்றுமைகளைத் தாண்டி சமநிலையை நோக்கி நடை போட வேண்டும் என்பதே அதன் பொருள். சில நாடுகளில் ஏழை-பணக்கார இடைவெளி பெரிதாக இருக்கிறது. சில நாடுகளில் சிறிதாக இருக்கிறது. சில கண்டங்களில் நாடுகளுக்கு இடையே ஏழை-பணக்கார இடைவெளி குறைவாக இருக்கிறது. சில கண்டங்களில் அதிகமாக இருக்கிறது. இடைவெளி இல்லாமல் செய்வது இயலாதது என்றாலும் இடைவெளியைக் குறைப்பதுதான் எல்லோருக்கும் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதே சமதர்மம் பேசும் எல்லோருடைய நோக்கம். சமம் என்ற சொல்லைக் கேட்டாலே நம்ம நாட்டில் நிறையப் பேருக்குக் கோபம் வந்து விடுகிறது. அது இயற்கைக்கு எத

நண்பன் - திரைப்பட விமர்சனம்

படம்
வாரம் முழுக்க மூச்சு விடக் கூட முடியாத மாதிரி வேலை கொன்றெடுக்கிறது. சனி-ஞாயிறு மட்டும்தான் நமக்கு வேண்டிய வேலைகளைச் செய்து கொள்ள முடியும். சில சனி-ஞாயிறுகளில் அதுவும் முடியாத மாதிரிப் பார்த்துக் கொள்ளப் படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக் கிழமையும் அப்படித்தான் அன்று முடிக்க வேண்டிய வேலைகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்துக் கொண்டு அன்றைய நாளைத் தொடங்கினேன். வழக்கமாகவே தொலைக்காட்சியிடம் எளிதாகச் சிக்கிக் கொள்வதில்லை. சில நேரங்களில் சிறப்பான நிகழ்ச்சி ஏதாவது கட்டிப் போட்டு விடும். அப்படி அந்த வாரத்தைத் தொடங்கி வைத்தது - "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..." என்று ஆரம்பித்து "திரைக்கு வந்து சில மாதங்களே ஆன... நண்பன்" என்று முடிந்த விளம்பரம். விளம்பரம் போட்டு சில நிமிடங்களிலேயே படத்தையும் போட்டு விட்டார்கள். தமிழ்நாட்டு விளம்பரங்களை இங்கு போடுவதால் பிரயோசனம் இல்லையென்பதால் இடையிடையில் விளம்பரங்களும் கடுப்படிப்பதில்லை. எப்போதாவது ஒன்றோ இரண்டோதான் விளம்பரம் வருகிறது. அதனால் தொலைக்காட்சியில் படம் பார்ப்பது என்பது அவ்வளவு எரிச்சல் பிடித்த வேலையாக

குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (2/3)

படம்
மலர்ச்சி... தமிழை முறையாகக் கற்றுத் தேர்ந்த நா.பா.வின் நடை அன்றைய தமிழகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தன் முதல் புதினத்திலேயே ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு செய்யுளோடு - கவிதையோடு தொடங்கிய அந்தப் புதுமை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. கவிதைக்கும் பேச்சுக்கும் மரியாதை இருந்த காலமாதலால் அரவிந்தனும் பூரணியும் அன்றைய இளைஞர்களின் மனதை எளிதில் கொள்ளை கொண்டிருக்கிறார்கள். கவிதையைப் பெரிதாக நினைத்த கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவன் என்ற முறையில் அதன் ஆற்றலை ஓரளவு உணர முடிந்தது. இத்தோடு கவிதையும் பேச்சும் அழிந்து விடும் என்று சொல்வதற்கில்லை. கவிதை கண்டிப்பாக வாழும். கைபேசியில் குறுந்தகவலாக அனுப்ப முடியும் அளவுக்கு எழுதப் படும் காதல்க் கவிதைகள் மட்டும் வாழும். பிழைப்புக்கு உதவும் வகையில் இருக்கும் பேச்சாற்றல் மட்டும் வாழும். அதன் பின் குறிஞ்சி மலர் கூட அன்றைய சூழலுக்கு ஏற்ற மாதிரி ரீமேக் பண்ணப் பட்டால்தான் படித்துப் பார்க்கப் படும். "பாக்கியைக் கொடுய்யா!" என்று கேட்கப் போகும்  பூரணியிடம், புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர் புன்னகை பூக்கக் கையெடுத்துக் கும்ப

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 5/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடர்ச்சி... அலுவலக வாயிலில் இருந்த காவலாளர் சிரிக்காமலே வரவேற்றார். 'மீண்டும் ஒரு முறைத்த முகமா?!' என்று எனக்கு ஏமாற்றமும் கவலையும் ஏற்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆட்களைப் புன்முறுவலோடு வரவேற்க வேண்டும் என்று இங்கே நம் நிறுவனங்களில் பணிபுரியும் காவலாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி எல்லாம் கொடுக்கிறோம். அதையெல்லாம் பார்த்து ஒருவேளை அது மேற்குலகப் பழக்கமாக இருக்கும் போலும் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். அப்படியானால் அங்கே இருக்கிற காவலாளர்கள் ஏன் நம்மை மட்டும் சிரித்து வரவேற்பதில்லை?! அங்கே இருந்த க

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 1/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! சென்ற முறை சிங்கப்பூர் வந்து திரும்பிய போது பயணம் நிறைவடையாமலே திரும்பிய ஓர் உணர்வோடுதான் வண்டியேறினேன். அதனால்தான் சிங்கப்பூர் பற்றிய கடைசி இடுகையின் இறுதியில் , "மீண்டும் வருவேன்; அப்படி வரும் போது இன்னும் அதிகமான நாட்கள் இருந்து விட்டுத்தான் செல்வேன்!" என்று தொடையில் தட்டிச் சூளுரைத்துச் சென்றேன். சினிமாப் படங்களில்தான் நாயகன் சூளுரைத்த படி சொன்னதை எல்லாம் சாதித்துக் காட்டுவார். நம்ம வாழ்க்கை என்ன கதை வசனம் எழுதி இயக்கப் படும் படமா? அப்படியே சாதித்துக் காட்ட? ஏதோ விதியின் புண்ணியத்தில் மீண்டும் சிங்கப்பூர்

வேற வியப்புகள் - உள்ளுணர்வும் கனவுகளும்!

படம்
இன்று கலாச்சார வியப்புகள் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். அதற்குள் வேறொரு வியப்பு வந்து இன்றைய நாளையே ஆட்டி விட்டது. வியப்பு என்பதை விட அதிர்ச்சி என்றே சொல்லலாம். காலை படுக்கையில் இருந்து எழும் போதே பயத்துடனேயே எழுந்தேன். அதிகாலை அயர்ந்த தூக்கத்தில் ஒரு கனவு. தலைக்கு மேலே பறக்கும் விமானம் ஒன்று தலைக்கு மேலேயே விழுகிற மாதிரிக் கனவு. 'ஐயோ, சோலி முடிஞ்சதே!' என்று அலறுகையில் தரையில் முட்டிய விமானம் சிரிக்கும் பலூனாக (விமானம் அளவுக்கு இராட்சத பலூன்!) மாறி ஏதோ வாழ்த்துச் சொல்கிறது. கெட்ட கனவாக ஆரம்பித்து சுபமாக முடிந்ததால் பயப்பட வேண்டியதில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டு அலுவலகம் சென்றேன். அலுவலகம் விமான நிலையத்துக்கு அருகில் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் மேலெழும்புவதைக் காண முடியும். அப்படிக் கண்ட முதல் விமானம் எங்கே கீழே விழுந்து விடுமோ என்கிற பயத்திலேயே நடந்து அலுவலகத்துக்குள் சென்றேன். பின்னர் செய்தித் தளங்களைத் திறந்ததும், நைஜீரியாவில் விமானம் ஒன்று விழுந்து விட்ட செய்தி. சிறிது நேரம் கழித்து, நான் பார்த்த காட்சியைப் போன்றே  ஒரு காட்சியைப் பெண்மணி ஒருவர் வி

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர்

படம்
போன வாரத்தில் ஒருநாள் தமிழ்மணம் வலைச்சரத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இந்த வாரத்தில் தமிழ்மணம் தளத்தில் நட்சத்திரப் பதிவராக இருக்கச் சொல்லி அழைப்பு விடுத்திருந்தார்கள். மகிழ்ச்சியான செய்திதான். சற்றும் எதிர் பார்த்திராதது என்றும் சொல்ல வேண்டும். ஒரேயொரு சிரமம் - தினமும் ஓர் இடுகையாவது இட முயற்சிக்கவும் என்று சொல்லியிருக்கிறார்கள். வேலை பெண்டு நிமிர்ந்து கொண்டிருக்கிற காலகட்டமாக இருப்பதால் அது குதிரைக்குக் கொம்பு வளர்க்கும் வேலையாகி விடுமோ என்கிற அச்சம் ஒருபுறம் வாட்டினாலும் இப்படியானதொரு நல்வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்கிற உள்ளுறுதியோடு உள்ளே குதிக்கிறேன். பார்க்கலாம். எப்படிப் போகிறது இந்த வாரம் என்று! எழுதுவது சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்த ஒரு வேலை. எழுத்தை முழு நேர வேலையாகச் செய்வதில் பெரிதாக ஆர்வம் இல்லை. முழு நேர வாசிப்பிலும் முழு ஈடுபாடில்லை. ஆனால், வாழ்க்கையில் எழுத்து ஒரு முக்கியப் பங்காக இருக்கப் போகிறது - இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் எப்போதுமே இருந்தது. மொழி பெயர்ப்பு நிறையச் செய்ய வேண்டும் என்கிற உந்துதல் அடிக்கடி