இடுகைகள்

ஏப்ரல், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இங்கு அரசியல் பேசாதீர்

“பழி தீத்துட்டாய்ங்கடா. குடிய இன்னைக்கு சங்கறுத்துட்டாய்ங்க!” என்றான் தமிழ்க்குடிமோனின் நெருங்கிய பணித் தோழர்களில் ஒருவனான மதுரை. ‘மதுரை’ என்பது அந்த நிறுவனத்தில் - அணியில் நீண்ட காலமாகப் பணிபுரியும் ஒரே மதுரைக்காரனான முத்துவின் பெயர். இடம், பொருள், ஏவல் பொருத்து அவர் ‘மதுரை’ எனவும் ‘முத்து’ எனவும் இருவேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுவார். தமிழ்க்குடிமோன்தான் ‘குடி’. நீளநீளமான பெயர்களை இரண்டு-மூன்று எழுத்துக்களுக்குள் சுருக்கிவைத்துக்கொள்வது அவனுடைய அலுவலகத்தில் மட்டுமல்ல, வெளிநாட்டுக்காரர்களோடு அதிகம் பணிபுரியும் அது போன்ற எல்லா நிறுவனங்களிலுமே இருக்கும் பழக்கம்தான். ‘தமிழ்க்குடிமகன்’ என்பதுதான் ‘தமிழ்க்குடிமோன்’ என்று மருவி மாறியிருந்தது. மருவலுக்கான மாபெரும் காரணம் தலைவனின் மலையாள மோகம். மலையாள மோகம் என்பது அம்மொழியின் மீதானது என்பதைக் காட்டிலும் அம்மொழி பேசும் மக்கள் மீதானது. மக்களிலும் குறிப்பாகப் பெண்குட்டிகள் மீதானது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லைதானே! காலம்காலமாகவே தமிழ்க்குடிமகன்களுக்கு மலையாளக்குடியின் மோன்களைவிட மோள்கள் மீது படிந்து படர்ந்திருக்கும் பாசம் இயல்பானதுதானே