ஹிட்லர் யார்?
அமேசானில் இலவசமாகப் படிக்கக் கிடைக்கும் நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டாவது நூல் ஹிட்லர் பற்றியது. இது போன்றே ஒரு மணி நேரத்துக்குள் படித்து முடிக்க முடிகிற மாதிரியான பல நூல்கள் இருக்கின்றன. எத்தனையோ மகான்களையும் அறிஞர்களையும் கொட்டிக் கிடக்கிற நூல்களுக்கு நடுவில் இருந்திருந்தும் இதைப் போயா படிக்க என்றுதான் முதலில் தோன்றியது. வரலாறு எல்லோரையுந்தானே பதிந்து வைத்திருக்கிறது. மனித குலத்துக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எல்லோருக்குமே வரலாற்றில் இடம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் தாக்கம் நேர்மறையானதா எதிர்மறையானதா என்பது இரண்டாம் பட்சந்தானே. ஹிட்லர் பற்றி நாம் மீண்டும் மீண்டும் கேள்விப்பட்ட, கேள்விப்பட்டு மறந்த பல கருத்துக்களைப் பற்றிய தொகுப்புதான் இதுவும். ஹிட்லரின் இளமைக் காலம் கொடுமையானதாக இருந்திருக்கிறது. குடிகார – கொடுமைக்காரத் தந்தை. அவன் இரண்டு மணங்கள் புரிந்து அதன் மூலம் பெற்றெடுத்த பிள்ளைகள் ஒவ்வொன்றாக ஏதோவொரு பிரச்சனையில் சிறு வயதிலேயே இறக்கிறார்கள். தாய் சொல்ல முடியத் துன்பங்களுக்கு உட்படுத்தப் படுகிறாள். பின்பொருநாள் தாயும் இறந்து போகிறாள். இளமைப்