இடுகைகள்

விளையாட்டு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிரிக்கெட், மக்கட்தொகை மற்றும் இந்தியா

படம்
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இந்தியா வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொள்வேன். அதுவும் முக்கியமான தொடர்களிலும் உலகக் கோப்பையிலும் என்ன விலை கொடுத்தாவது இந்தியா வென்று விட வேண்டும் என்று துடிப்பேன். ஏன்? அதேதான். சரியான விடை. ஏனென்றால், நான் இந்தியன். அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. என்ன அது? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா வெல்கிற போதெல்லாம் ஒப்பற்ற அளவிலான உலக மக்கட்தொகை கொண்டாடிக் குதிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக மக்கட்தொகை கொண்டுள்ளது. எனவே இந்தியாதான் வெல்ல வேண்டும் என்றே சொல்வேன். இந்த உண்மையை அறிய உலகளாவிய அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஏனென்றால், சீனா கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீண்ட காலமாகவே சரியான புள்ளிவிபரம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்றுதான் அதற்கான நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதைப் பார்த்து சில அருமையான (!) கருத்துக்களைக் கண்டெடுத்திருக்கிறேன். இதோ... ஆஸ்திரேலியா 22,567,780 நியூ சிலாந்து 4,393,500 இலங்கை 21,513,990 பாகிஸ்தான் 174,578,558 ...

கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!

இவ்வளவு சூப்பரான ஒரு ஆட்டத்தைப் பார்த்து விட்டு (டை ஆன இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம்), அதைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருப்பது என்பது இயல்பானதே. குறைந்த பட்சம் அடுத்த ஆட்டம் பார்க்கும் வரையாவது இது நீடிக்கும். கிரிக்கெட் என்பதே அதுதானே?! ஒரு நாள் முழுக்கப் பார்ப்பதில் வீணாக்குவது; அதன் பின்னர் பல நாட்களை அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவதில் வீணாக்குவது.  ஒரே ஆட்டத்தில் ஒரே நாளில் 676 ஓட்டங்கள் அடிப்பதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்த போதும், தொலை நோக்கில் அதுதான் இந்த விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆட்களை ஈர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்த விளையாட்டையும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் T20 வந்த பிறகு இன்னும் கூடுதலாகி விட்டது. எல்லா நாடுகளிலுமே பந்து வீச்சாளர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட் என்னும் படிவம் உண்மையான கிரிக்கெட்டை - அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொன்ற...

கிரிக்கெட் - ஒரு காதற் தோல்வி!

படம்
அடுத்த சில நிமிடங்களில், பத்தாவது உலகக் கோப்பையின் முதல்ப் பந்து வீசப்படப் போகிறது. ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக நீண்ட காலத்துக்குப் பின் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருக்கிறேன். நான் இதற்கு முன் கடைசியாகப் பார்த்தது ஐ.பி.எல்-1. ஆரம்பம் முதல் கடைசி வரை! வீட்டில் என்னைத் தனியாக விட்டு விட்டு, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என் மனைவி ஊருக்குப் போயிராவிட்டால் அதுவும் நடந்திராது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எனக்கும் இந்த விளையாட்டுக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஒன்று விழும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். இன்று அது எதார்த்தமாகி இருக்கிறது. சும்மா - அப்படியே என்ன நடக்கிறதென்று பார்க்கலாமென்று ஈ.எஸ்.பி.என். பக்கம் வந்தேன். என் பால்ய காலத்தில் உயிருக்கும் மேலாக நேசித்த இந்த விளையாட்டுடனான என் உறவைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறேனா? விளம்பர இடைவேளையின் போது கூட யாராவது சேனலை மாற்றினால் கிறுக்குப் பிடிப்பது போல் உணர்ந்த காலமொன்று உண்டு. பல சோலி பார்த்தலிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. இப்போது உணர்ந்திருப்பது என்னவென்றால், இது போன்றவைகளை எழுதுவத...

உணவு, உலகக் கோப்பை மற்றும் ஊழல்!

படம்
உலகக் கோப்பைக் கால்ப்பந்தாட்டம் எப்போதுமே நமக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. கோப்பையைப் பற்றிச் சொல்ல வில்லை... அதில் ஆடுவதே அவ்வளவு சிரமமாக இருக்கிறது நமக்கு. கிரிக்கெட் என்றால் நமக்குக் கிறுக்கு. மற்ற ஆட்டங்கள் அனைத்துமே நமக்கு ஆடப் பிடிப்பதில்லை. பார்க்க மட்டும்தான். ஏன்? நம் வாழ்க்கை முறைக்கும் அதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? உணவு முறை ஒரு காரணமா? இருக்கலாம். அதனால்தான் நம்மால் கிரிக்கெட்டிலும் ஒரு ஷோயப் அக்தரோ ப்ரெட் லீயோ உருவாக்க முடியவில்லை. எந்த விளையாட்டுக்குமே அதீத உடல் வலிமையும் ஆற்றலும் வேண்டும். அறிவியல் பூர்வமான ஓர் உண்மை என்னவென்றால் நாம் அதில் கடைசி. சைவம் ஆரோக்கியம்; ஆனால் பலம் அல்ல. அப்படியானால், எப்போதுதான் நாம் அதே அளவு கிறுக்கோடு கால்ப்பந்தாடுவோம்? அசைவம் சாப்பிடுவோர் கால்ப்பந்தாட்டக் களங்களுக்கு அருகில் வரும்போதுதான் அது சாத்தியம். யார் அவர்களை வர விடாமல் தடுப்பது? கிரிக்கெட். ஏன்? மாலை வேளையில் தினமும் விளையாட வேண்டும் என்ற பழக்கமே சைவம் சாப்பிடுபவர்களிடம்தான் இருந்தது. அவர்கள்தாம் நம்மை எல்லா விளையாட்டுகளுக்கும் அறிமுகப் படுத்துவது. அவர்கள்...