இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மீநவீனவாதம்: நவீனவாதத்துக்கும் பின்நவீனவாதத்துக்குமான மறுமொழி

மீநவீனவாதம்: நவீனவாதத்துக்கும் பின்நவீனவாதத்துக்குமான மறுமொழி மனித அகநிலைக்குத் திரும்பல்  --- கிரெக் டெம்பர் (Greg Dember) | கிரெக் டெம்பர் எழுத்தாளரும் சிந்தனையாளரும் இசையமைப்பாளரும் ஆவார். மீநவீனவாத ஆராய்ச்சியாளரான இவர், லிண்டா செரியெல்லோவுடன் இணைந்து மீநவீனவாதத் திருப்பத்தை ஆவணப்படுத்தும் முன்னணித் தளமான ‘வாட் இஸ் மெட்டாமாடர்ன்’ (What Is Metamodern)-இன் ஆசிரியராக உள்ளார். --- உண்மை முதல் கலை வரை அனைத்தையும் விமர்சிக்கும் பின்நவீனவாதம் நம்மை ஓர் அறிவுப் பாலைவனத்தில் தள்ளியுள்ளது. நவீனவாதத்தின் அறிவியற் குறைப்புவாதத்தை மறுதலிக்கும் அதே வேளையில், பின்நவீனவாதத்தின் முரண்நகையான தொலைவிலிருந்து அகவயமான அனுபவத்தைப் பாதுகாக்கும் புதிய இயக்கமான மீநவீனவாதமே, ஒரு புதிய -வாதத்துக்கான (-ism) நமது தேவைக்கான தீர்வாகும் என்று கிரெக் டெம்பர் வாதிடுகிறார். மீநவீனவாதம், ஒரு கருத்தியல் வகையாக, அதன் ஏற்பு வளைவில் மிகவும் புதிதாக உள்ளது - பொதுவான பார்வையாளர்களுக்காக எழுதும்போது - புதிதாக ஒன்றையோ குறிப்பிட்ட எதையுமோ சொல்வதற்கு முன் அடிப்படைகளை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. மேலும், மீநவீனவாதம் எப்போதும...

செயற்கை நுண்ணறிவு

பல நாட்களாக புலி வருது புலி வருது கூச்சல் மட்டுமே வந்தது புலி வந்த பாடில்லை கூச்சல் ஓய்ந்து புலி வருதாம் புலி என்று சிரித்து மறந்திருந்த வேளையில் வந்தே விட்டது புலி சிலர் புலிக்குக் கறியானோம் சிலர் புலிக்கறி பிரியாணி உண்போர் ஆனோம் Wrote for the world's first Tamil AI panel discussion that took place in Dublin, CA, USA on March 9th, 2025.

போர் - பாப் வூட்வர்ட்: நூலுரையாடல்

போர் - பாப் வூட்வர்ட்: நூலுரையாடல்  அமெரிக்க இதழியல் உலகில் பாப் வூட்வர்ட் ஒரு பெரும் ஆளுமை. இப்போது அவருக்கு 81 வயது ஆகிறது. இதழியலாளர்களுக்குக் கொடுக்கப்படும் விருதுகள் அனைத்தும் பெற்றவர். 1971-இல் இதழியலாளராகப் பணியைத் தொடங்கியவர், அடுத்த ஆண்டே அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்த பெரும் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியவர். 1776 முதல் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளாக மக்களாட்சியாக இருந்த அமெரிக்காவில், 37 அதிபர்களைக் கண்டுவிட்ட அமெரிக்காவில், அதன் அன்றைய அதிபர் நிக்ஸன் மீதே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அதை நிறுவி, அவரை வீட்டுக்கனுப்பிய பெருமை இவரைச் சாரும். ஓர் இதழியலாளர் சாதிக்க முடிகிற ஆகப்பெரும் சாதனை இது என்று இன்றும் கருதப்படுகிறது. இதுவரை அமெரிக்க அரசியல் பற்றி 21 நூல்கள் எழுதியுள்ளார். அவை அனைத்துமே அமெரிக்க மிகை விற்பனைப் பட்டியலில் இடம் பெற்றவை. அவற்றில் 14 முதலிடத்தில் இடம் பெற்றவை. எண்ணிப் பார்க்கவே முடியாத இடங்களிலிருந்து கூட தகவல் கறக்க முடிகிற இவரைப் போன்ற ஒருவரைத்தான் உளவுத்துறையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் உளவுத்துறை இயக்குநர் ஒருவரால் பாராட்டப்பட்டவர்...