ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!
இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல் இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிட...