பிற
"கட்டுனா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா இப்பிடியே இருந்துட்டுப் போறேன்." "ராசா அப்பிடிப் பேசாத ராசா. உங்கப்பா இதெல்லாம் கேட்டாத் தாங்க மாட்டாரு. நானே மாமாவ விட்டுப் பேசச் சொல்றேன். நானும் உங்கம்மாட்டப் போய்ப் பேசுறேன். ரெண்டு பேர்ல ஒருத்தரு எறங்கி வந்துதானே ஆகணும். ரெண்டு பேரும் நாம் பிடிச்ச மொசலுக்கு மூணு கால்னு நின்னா எப்பிடி?" “நான் என்ன சீமைலயா போய்ப் பொண்ணு கட்டணுங்கறேன்? இந்தாருக்கு மாதலப்புரம். ஒன்ற மைல் தொலவட்டு. அதுக்கு எதுக்கு இம்புட்டு வீம்பு? பாத்துருவமே. நானா அவரான்னு. நாப்பத்தஞ்சு வயசுக் கெழவனுக்கு அம்புட்டு மொரண்டு இருந்தா இருபது வயசு எளவட்டம் எனக்கு எம்புட்டு இருக்கும்? நீங்க ஒன்னும் உங்கொண்ணங்கிட்ட எனக்காகப் பரிஞ்சு பேச வேணாம். நான் பாத்துக்கிறேன் எம் பிரச்சனய.” “இல்ல, ராசா. அவர் என்ன சொல்றாரு? நம்ம ஊர்ல இல்லாத பொண்ணா? நம்ம வம்சத்துலயே அந்தப் பழக்கம் இல்லையே ராசா. உள்ளூர்லயே சாதி மாறிக்கூட சம்பந்தம் செஞ்சிறலாம். ஊரு விட்டு ஊரு போயிச் செய்யிறது சாதாரணப்பட்ட வேலையா? நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது ராசா. அவங்க பேச்சு, பழக்கவழக்கமே வேற மாதி...