"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்
"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள் ஜோ மெக்கல க் | ஆகஸ்ட் 24, 2011 காமென் காலெவ் இயக்கிய “தி ஐலண்ட்” (The Island) திரைப்படத்திலிருந்து இது வேடிக்கையானதுதான், அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கி அறிமுகமே தேவையில்லாத ஒரு தலைசிறந்த மனிதரா அல்லது அவரது எண்ணற்ற ஈடுபாடுகளின் பரப்பு தெளிவான சுற்றுக்கோடு ஒன்றை வரையக் கோருகிறதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எனது இந்தச் சமரசத்தை மன்னியுங்கள். திரைப்படம், சர்க்கஸ், இசை, ஊமம் (mime), கவிதை, நாடகம், டாரோ, அதற்கு மேல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக, வரைகதை (காமிக்ஸ்) ஆகியவற்றில் முதுவரான, 82 வயதான சிலி நாட்டின் மைந்தர், நான்கு மொழிகளில் புதிய அல்லது கூடிய விரைவில் வெளிவரப்போகிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெருமைக்குரிய இவரை இதுதான் என்று குறிப்பிட்டு வகைப்படுத்துவது பெரும் சிரமமாகவே உள்ளது. ஸ்பானிய வாசகர்கள் அவரது சமீபத்திய உரைநடைப் படைப்பான ‘மெட்டா ஹினியாலோஹியா’ (ஆங்கிலத்தில் ‘மெட்டாஜீனியாலஜி’) (மரியான் கோஸ்டாவுடன் இணைந்து எழுதியது) எனும் நூலை விரைவில் வாசித்து அனுபவிக்கலாம். இது, 20...