அ.தி.மு.க.அமைச்சர்கள் யார் யார்?
1. ஜெயலலிதா - இவர் தான் முதல்வர். ஐந்து வருடமும் கண்டிப்பாக நீடிப்பார் என்று என்னால் உத்திரவாதம் கொடுக்க முடிந்த ஒரே ஆள். எத்தனை பேர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்தான் எல்லாமுமாக இருப்பார். காவல் துறை கண்டிப்பாக இவர் கையில் இருக்கும். நிதித் துறையும் இருக்க வாய்ப்புண்டு. கொள்ளை அடித்ததைப் பிடுங்கி அரசுடைமையாக்கும் ஒரு துறை அமைக்கப் பட்டாலும் நல்லது. கேபிள் டி.வி. களை அரசுடைமையாக்குவதும் இத்துறைக்குக் கீழேயே வர வேண்டும். 2. பன்னீர் செல்வம் - முன்னாள் முதல்வர். அவர் முன்னால் இதைச் சொன்னால் மகிழ்ச்சியடையாமல் கோபப் படுவார் - பயப் படுவார். கண்டிப்பாக நிதித் துறை இவருக்கில்லை. அதற்கான விபரம் இவருக்கு இருக்கிறது என்று யாராவது கவனித்திருந்தால் கருத்துரை இடுக. கண்டிப்பாக வெளியிடப்படும். பொதுப் பணித் துறையில் உள்ள நிதிகளை மட்டும் கவனிக்கும் பணி கிடைக்கலாம். சென்ற முறை அந்தப் பதவியில் இருந்தபோது நன்கு கவனித்து விட்டதாக நெருங்கிய தகவல்கள் நிறையக் கிடைத்தன. ஆனாலும், மிகவும் நல்லவர். அதிர்ந்து பேச மாட்டார். அரசியல்வாதிக்குரிய வேறு எந்தக் குறியீடும் தெரியாது. மற்றபடி, அ.தி.மு.க.வி...