குறிஞ்சி மலர் - நா. பார்த்தசாரதி (1/3)
சிங்கப்பூர் வரும் போது எண்ணி எண்ணி மகிழ்ந்த ஒன்று - தமிழுடனான என் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வசதியான ஒரு வெளிநாட்டுக்குச் செல்கிறோமே என்பதுதான். பெங்களூரில் தமிழ் கற்க முடியாத என் மகள் இங்கு வந்து ஆனா ஆவன்னாப் படிக்க முடியும். தமிழர்கள் தம் சொந்த மண்ணை விடக் கண்ணியமான வாழ்க்கை வாழ்கிறார்கள் இங்கு. தமிழ் நாட்டில் பல ஊர்களில் கிடைக்காத வசதி இங்கே கிடைக்கிறது. அப்படியான ஒரு வசதி - பகுதிக்கு ஒரு நூலகம் இருக்கிறது. ஒவ்வொரு நூலகத்திலும் ஒரு பகுதி தமிழுக்கென்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். இதை அறிந்ததும் எப்படியும் நூலகத்தில் உறுப்பினராகி விட வேண்டும் என்று முடிவு செய்து அதையும் செய்து விட்டேன். முதல் முறை உள்ளே நுழைந்த போது என்னென்ன நூல்கள் இருக்கின்றன என்பதைக் கண்டு மகிழ்வதிலேயே இரண்டு மணி நேரம் போய் விட்டது. ஆனாலும் தமிழின் தலை சிறந்த நூல்கள் என்று அறியப்படும் எதுவும் சிக்க வில்லை. அந்நூல்களே அங்கு இல்லையா அல்லது அவை அனைத்தும் எடுத்துச் செல்லப் பட்டுள்ளனவா என்று தெரியவில்லை. இருந்த நூல்களில் நன்கு கேள்விப் பட்ட ஒன்று - குறிஞ்சி மலர். குறிஞ்சி மலர் பற்றி எப்படித் தெரியும் என்பத...