கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 9/12
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... அடுத்து என்ன என்று பார்த்தால் உடனடியாக நினைவுக்கு வந்தது - இலண்டன் ப்ரிட்ஜ். நியூ யார்க் என்றால் சுதந்திர தேவி சிலையையும் பாரிஸ் என்றாலே ஈபிள் டவரையும் சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து அடிக்கும் தண்ணீரையும் டெல்லி என்றாலே இந்தியா கேட்டையும் சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேசனையும் காட்டுவது போல இலண்டன் என்றாலே காட்டப்படும் முதல் படம் இதுதான். இலண்டன் சென்ற எல்லோருமே புகைப்படம் பிடித்து முகநூலில் (FACEBOOK) போட்டுப் படம் காட்டுவதும் இதை வைத்துத்தான். சுதந்திர தேவி சிலை மற்றும...