என் காதல் - புடலங்காயும் பூசணிக்காயும்!
ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் அல்லது நம் மீது பாசக்காரராக இருக்க வேண்டும் என்று எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இருக்க வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெயர் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு காரணம் கூட இருக்கலாம். நம் வாழ்வின் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடன் இருந்திருந்தால் கூட அத்தகைய பிடிப்புகள் ஏற்படலாம். அது மனிதர்களுக்கு மட்டுமில்லை. பொருட்களுக்கும் கண்ணால் காண முடியாத மற்ற பல்வேறு விஷயங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு பாடல் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சொல்லி விளக்க முடிந்தவை. சில அப்படி முடியாதவை. சில நேரங்களில் குரல், சில நேரங்களில் மெட்டு, சில நேரங்களில் இசை என்று பாடலின் அடிப்படையான பண்புகள் தவிர்த்து முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட சூழல் கூட அத்தகைய பிடிப்பைத் தீர்மானிக்க முடியும். முதல் முறையை விடுங்கள், பல முறை கேட்டுப் பிடிக்காத ஒரு பாடல் திடீரென ஒரு குறிப்பிட்ட சூழலில் கேட்டபின் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதுவரை பேசியதெல்லாம...