கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 7/7
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... ஊரெங்கும் எல்லாச் சந்தைகளிலுமே டூரியன் (முள்நாறிப் பழம்) என்றொரு பழத்தைக் கூவிக் கூவி விற்கிறார்கள். அது குவித்துவைக்கப் பட்டிருக்கும் பக்கம் போனாலே நாற்றம் குமட்டுகிறது. ஆனால் அதைச் சிங்கப்பூரர்கள் பெரிதும் விரும்பி உண்பார்கள் போலத் தெரிகிறது. விற்பனை எப்போதும் பிய்த்து வாங்குகிறது. பார்ப்பதற்குப் பலாப் பழம் போல இருக்கிறது. ஒருமுறை வாங்கிச் சென்று விட்டு வீட்டில் யாருமே நெருங்கக் கூட மாட்டேன் என்று சபதம் எடுக்க, எல்லாத்தையும் நாமே தின்று தீர்க்க வேண்டிய கட்டாயம் ஆகி விட்டது. இப...