இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நல்லோர் ஒருவர் உளரேல்...

ஏமாந்து அடிபட்டு மிதிபட்டு அவமானப் பட்டு இதற்கு மேலும் நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று தன்பரிதாபத்தில் தடம் தப்பப் போகையிலெல்லாம் உன்னைப் போல் ஒருத்தனோ ஒருத்தியோ வந்து விடுகிறீர்கள் இந்த உலகத்தில் இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும் சிறுமைகளின் போதெல்லாம் நான் நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு நானொன்றும் உங்களைக் காட்டிலும் நல்லவனில்லை என்றும் உங்களுக்காகவாவது இப்படியேவாவது நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும் நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!

ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!

இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல் இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிட...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... குதிரைகள் இங்கிலாந்தில் இன்னும் குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் நிறைய இருப்பது போற் தெரிகிறது. நகரத்துக்குள்ளேயே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் ஒருவேளை இதை விட அதிகமாக இருக்கக் கூடும். ஓட்டுனர் உரிமத்துக்காக வண்டி ஓட்டிப் பழகும் போது கூட குதிரை வண்டிகள் வரும் போதும் குதிரை வரும் போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விலாவாரியாகப் பாடம் எடுக்கிறார்கள். நம்ம ஊரில் மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகள் போல இருக்கலாம் என்று நினைக்கிறேன். தினமும் ராணியின் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 8/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... ஓட்டுனர் உரிமம் வந்த இடத்தில் நீண்ட காலம் இருக்கப் போகிற ஆசையில் ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட வேண்டும் என்று இறங்கியது பெரிய தப்பாகி விட்டது. சிங்கப்பூரில் இருக்கும் போதே சொந்தமாக ஒரு கார் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்கப் பொதுப் போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் டாக்சிகளில் போய் வருவதும் சிரமந்தான். அதுவும் இந்தியாவில் எங்கு போவதாக இருந்தாலும் காரிலேயே போய் வந்து பழகி விட்டவர்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற எல்லோரு...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 7/9

கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... மொழி இங்கிலாந்து வந்ததில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று - மொழி சார்ந்த பார்வை. பார்வை மாறியது என்று சொல்ல முடியாது. தெளிவடைந்தது எனலாம். சிறு வயது  முதலே, நாம் பெரிதாக மதிக்கும் அறிஞர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வி பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். மற்ற எல்லா விசயங்களிலும் அவர்களோடு ஒத்துப்போகும். ஆனால் இந்த விசயத்தில் மட்டும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கும். அது பிற்போக்குவாதமோ என்று கூடத் தோன்றும். மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துகிற அரசியல்வாதிகளையோ - மொழி என்றாலே உணர்ச்சி ...