இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதலிலிருந்து தொடங்க வேண்டும்...

நீயில்லாமல்  நான் இருக்க முடியவில்லை என்பது மட்டுமில்லை என்னோடே நீ இருக்க வேண்டுமென்று மட்டுமில்லை நானில்லாமல்  நீ இருப்பதையும் மணித்துளிகள் கூட ஏற்றுக் கொண்டு இருக்க முடியவில்லை நீ இருக்குமிடத்திலெல்லாம் நானும் நிறைந்திருக்க வேண்டும் என்றுமல்லவா தோன்றுகிறது?! சேர்ந்து பிறக்கவில்லை சேர்ந்தே வளரவில்லை சில மணி நேரங்கள் கூட சேர்ந்து இருந்ததில்லை நீயில்லாமற்தான்  இத்தனை ஆண்டுகள் எனக்கும் நானில்லாமற்தான்  இத்தனை ஆண்டுகள் உனக்கும் ஓடியிருக்கின்றன ஆனாலும்  அப்படியென்ன பொறுக்க இயலாமை?! உன் பிறப்பு முதலான எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும் நானும் பழக்கப்பட வேண்டுமென்றும் மொத்தப் பயணத்தையும் முதலிலிருந்து தொடங்கி உடன் வர வேண்டுமென்றும்... என் பிறப்பு முதலான எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும் உன்னையும் பழக்கப்படுத்த வேண்டுமென்றும் மொத்தப் பயணத்தையும் முதலிலிருந்து தொடங்கி உடன் வரவைக்க வேண்டுமென்றும் ...

பால்ய மணம்

எல்லாத் திருமணங்களையும் போலவே என் பெற்றோருடையதிலும் ஏகப்பட்ட ஓட்டைகள், சமரசங்கள், பிரச்சனைகள். என் தாத்தாவின் தரத்தைப் பார்த்து அவருடைய பையனின் தரத்தை எடை போட்டு, பெண்ணைக் கொடுத்து ஏமாந்தவர் என் தாய்வழித் தாத்தா. தரமில்லாத மாப்பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுத்து விட்ட ஒரே தவறுக்காக காலம் முழுக்க என் தந்தையாரையும் அவருடைய பிள்ளைகளையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கும் அவருடைய பையன்களுக்கும். நான்கும் ஆண் குழந்தைகளாகிப் போனதில் என் தாய்க்கு ஒரு வசதி. பிள்ளைகள் அனைத்துமே தாயையும் தாய் சார்ந்த உறவினர்களையும் சார்ந்து வாழப் பழகி விட்டன. விபரம் தெரிகிற வயதில் உயிரோடிருந்ததாலும், அள்ளிக் கொட்டிய பாசத்தாலும் தாத்தா-பாட்டி என்பதெல்லாம் தாய் வழியில் மட்டுமே மனதில் நின்றன. பெண்பிள்ளைகள்தாமே முதலில் பேரன் பேத்தி கொடுப்பவர்கள், எல்லாத் தாத்தா பாட்டிகளுக்கும்! சித்தப்பாமார்கள் அனைவரும் உதவுகிற நிலையில் இல்லாததாலும் மாமாமார்கள் அனைவரும் உதவ முடியாத நிலையில் இல்லாததாலும் நாங்கள் ஒரு பக்கம் சாய்ந்தது தவிர்க்க முடியாதது. தந்தை வழிச் சொந்த பந்தங்கள் அனைத்தும் இழவு வீடுகளில் மட்டுமே பார்க்க முடிந