இடுகைகள்

அக்டோபர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேடிக்கை மனிதர்

அன்று உன்னைக் கடவுள் என்று சொல்லி எங்களிடம் உன்னை விற்ற பலர் இன்று ஒவ்வொருத்தராக வெளியே வந்து நீயொரு மோசடி என்கிறார்கள் உன்னை விற்பதில் காட்டிய வீரியத்துக்காகவே அவர்களைத் துணைக் கடவுளர் ஆக்கிப் பார்த்தது உன் பக்தர் கூட்டம் இன்று நீயொரு மோசடி என்று  சொல்லத் தொடங்கி விட்ட ஒவ்வொருத்தரையும் அதே வேகத்தில் தோலுரித்துக் கொண்டிருக்கிறது உன் பக்தப்படை கடவுளுக்குப் பஞ்சமான மண்ணா இது? தோலுரிக்கும் தொழிற்சாலையிலிருந்து இன்னும் பல புதிய துணைக்கடவுளர் உருவாகலாம் உன்னை மோசடி என்றது மட்டுமில்லை உன்னை விற்றதும் தாம் செய்த மோசடி என்று ஒப்புக் கொள்கிற தைரியமாவது அவர்களுக்கிருக்கிறது அதனாற்தான் அவர்கள் கடவுளர் ஆயினர் போலும் ஆனால் உன் பக்தப்படை மட்டும் கடவுள் உன்னோடு சேர்த்து உன் வியாபாரிகளையும் கடவுளர் ஆக்கியமைக்கு வருத்தம் தெரிவிக்காமலே தொடர்ந்து உனக்குத் தொண்டு புரிந்து கொண்டிருக்கிறது வேடிக்கை பார்க்கும் நாங்களோ எதை நம்புவது என்று குழம்பிக் கிடக்கிறோம் மேலும் எம்மைக் குழப்ப கூடிய சீக்கிரம் கூடுதலாகப் பல மோசடிக் குற்றச்சாட்டுகள் வருவ என்பதையும் அறிந்தே காத்திருக்...

அன்பு

அறிவு ஈர்க்கிறது மயக்குகிறது வியப்பிக்கிறது போற்ற வைக்கிறது அன்புதான் அடிமைப் படுத்துகிறது

நடிகர் சங்கத் தேர்தல்

நாயகரில் வில்லன் நாயகரில் காமெடியன் நாயகரிலேயே வில்லன் பாதி காமெடியன் பாதி கலந்து செய்த கலவை வில்லரில் நாயகன் வில்லரில் காமெடியன் காமெடியரில் நாயகன் காமெடியரில் வில்லன் மேடைக்கு வெளியே கூத்துக்கட்டி எல்லாம் காட்டிவிட்டீர்களப்பா ஆல்ரவுண்டர்கள் நீங்கள்!

பெண் பாவம்!

அடிக்கடிக் கண்ணாடியில் முகம் பார்த்துக் கொள்வதில் இருந்து, இந்திப் படம் பார்த்து விட்டு வந்து மீசையை மழித்துக் கொள்வது வரை, தன் ஒவ்வொரு அசைவிலும், ‘இப்பவாவது அழகாக இருக்கிறேனா?’ ரீதியிலான அழகு சார்ந்த ஏக்கங்கள் அடிக்கடி ஏற்படுகிற சராசரி ப்ளஸ்டூ இளைஞன் கபிலன். தன்னை அழகான – அல்லது கொஞ்சம் அழகான – பெண் ஒருத்தி கடந்து போகிற போதெல்லாம் தன் அழகைப் பற்றி ஒருமுறை பரிசீலனை பண்ணிக் கொள்கிற அரும்பு மீசை உணர்வுகளும், அவளே திரும்பிப் பார்த்து விட்டால், ‘நானும் அழகுதானோ?!’ என்றும், பார்க்காமல் போய்விட்டால், ‘நான் அசிங்கமோ?!’ என்றும் குழம்புகிற - பதின்மத்தின் தவிப்புகள் நிறைந்த இளைஞன். காதலிப்பது தகுதி சார்பான ஒன்றாகவும் காதலிப்பவன் நாயகனாகவும் கருதப்படுகிற, இந்தத் திரைப்படத் தாக்கம் நிறைந்த, கற்பனைக் களிப்புகளை ஊக்குவிக்கிற காலச் சூழ்நிலையில், பெண் ஒருத்தியைக் கவர்ந்து விட்டால், தான் தகுதியும் தராதரமும் உடைய முழுமையான ஆண்மகனாக அங்கீகரிக்கப் பட்டுவிட்டதாக எண்ணிக் கொண்டிருக்கிற இளைஞர் சமுதாயத்தில், “என்னையும் ஒருத்தி காதலிக்கிறாள்!” என்று பெருமைப் பட்டுக் கொள்ளவாவது காதலி ஒருத்தி தேவைப்படுகிறாள் இன...