வேடிக்கை மனிதர்


அன்று உன்னைக் கடவுள் என்று சொல்லி
எங்களிடம் உன்னை விற்ற பலர்
இன்று ஒவ்வொருத்தராக வெளியே வந்து
நீயொரு மோசடி என்கிறார்கள்

உன்னை விற்பதில் காட்டிய வீரியத்துக்காகவே
அவர்களைத் துணைக் கடவுளர் ஆக்கிப் பார்த்தது
உன் பக்தர் கூட்டம்

இன்று நீயொரு மோசடி
என்று  சொல்லத் தொடங்கி விட்ட ஒவ்வொருத்தரையும்
அதே வேகத்தில் தோலுரித்துக் கொண்டிருக்கிறது
உன் பக்தப்படை

கடவுளுக்குப் பஞ்சமான மண்ணா இது?
தோலுரிக்கும் தொழிற்சாலையிலிருந்து
இன்னும் பல புதிய துணைக்கடவுளர் உருவாகலாம்

உன்னை மோசடி என்றது மட்டுமில்லை
உன்னை விற்றதும் தாம் செய்த மோசடி
என்று ஒப்புக் கொள்கிற தைரியமாவது அவர்களுக்கிருக்கிறது
அதனாற்தான் அவர்கள் கடவுளர் ஆயினர் போலும்

ஆனால் உன் பக்தப்படை மட்டும்
கடவுள் உன்னோடு சேர்த்து
உன் வியாபாரிகளையும் கடவுளர் ஆக்கியமைக்கு
வருத்தம் தெரிவிக்காமலே
தொடர்ந்து உனக்குத் தொண்டு புரிந்து கொண்டிருக்கிறது

வேடிக்கை பார்க்கும் நாங்களோ
எதை நம்புவது என்று குழம்பிக் கிடக்கிறோம்

மேலும் எம்மைக் குழப்ப
கூடிய சீக்கிரம்
கூடுதலாகப் பல மோசடிக் குற்றச்சாட்டுகள் வருவ
என்பதையும் அறிந்தே காத்திருக்கிறோம்

வேடிக்கை பார்ப்போருக்கு
இழக்க என்ன இருக்கிறது?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்