தலைமை அடிமை
ஓர் அடிமை தேசத்தில் அவர்களுக்கேற்ற தலைவன் ஒருவன் இருந்தான். தேசத்தின் அடிமைப் புத்திக்குத் தலைவனே காரணம் என்றும் அந்தத் தலைவனுக்குப் பின் தேசமெங்கும் அடிமைத்தனம் ஒழிந்து விடும் என்றும் கனவு கண்டு கொண்டே காலங்காலமாகக் காத்திருந்தது ஓர் அறிவாளிக் கூட்டம். தலைவன் மறைந்ததும் அறிவாளிகள் எல்லோரும் குதூகலித்தனர். அத்தோடு அடிமைத்தனம் ஒழிந்து விட்டது என்று கொண்டாடிக் களித்தனர். மறுநாள் விடிந்ததும், மறைந்த தலைவனின் தலைமை அடிமை முடிசூட்டப் பட்டிருந்தார். 'தலைமை அடிமை' எனும் பதவி தலைமைப் பண்பைப் பார்த்துத் தரப்பட்டதில்லை; தலைசிறந்த அடிமைத்தனத்துக்காகத் தரப்பட்டது என்பது கூட மறந்து போயிருந்தது தேசத்தின் அறிவாளிகளுக்கும் குடிமக்களுக்கும். தலைமை அடிமையின் தலைமையைப் பார்த்துப் பூரித்தவர்கள், அவர்தான் அடிமைத்தனத்தை ஒழிக்க அடிமை வடிவாகவே வந்த தூதர் என்று கருத்துருவாக்கவும் கடுமையாக முயன்றனர். தம்மில் ஒருத்தர் தலைவன் ஆனதைக் கண்டு அடிமைகளும் அவரை ஆதரித்து வலுவூட்டுவர் என்று பெரு நம்பிக்கை கொண்டனர் அறிவாளிகள். அவர்கள் அறிவாளிகள். அறிவாளிகளின் உளவியல் நன்கறிந்தவர்கள். ஆனால் அடிமைகளின் உளவியல் அவர்கள