இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தலைவன்

அகநானூற்றுத் தலைவன் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத புறநானூற்றுத் தலைவன் இங்கும் அதே போல் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன் கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர் என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார் கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர் வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்

நெனப்பு

பூனை தன்னைப் புலியாக நினைத்துக் கொண்டு பாய்ந்த போது எலி இரையாகும் முன் தன்னை மானாக எண்ணிக் கொண்டது

அறிவாயுதம்

அறிவு பெரும் ஆயுதந்தான் தன்னையும் தன் பிள்ளைகளையும் மட்டுமே காத்துக் கொள்ளும் மடக்குக் கத்திகளும் உள மண்ணைக் காக்கும் போர்வாட்களும் உள உயிர்காக்கும் சிகிச்சைக்குப் பயன்படும் அறுவைக் கத்திகளும் உள வெற்று மிரட்டல்களுக்கும் வேடிக்கை காட்டவும் நடிப்புக்கும் மட்டுமே பயன்படும் அட்டைக்கத்திகளும் உள இதில் எது உன் ஆயுதம்?

பசி

பசியில் துடிக்கிறானா? பக்கத்தில் இருப்பவனைப் பகைவனாக்கி விடு பசி மறந்து போகும்