கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும்
கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும் மனிதர்களின் செயற்கையான தலையீடுகள் அவலத்தின் அளவைப் பெரிதளவில் கூட்டிவிட்டன கேரளம் பல பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்குப் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், 2010-இல் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் வல்லுநர் குழு’ (மே.ம.சு.வ.கு.)-வின் தலைவர் சூழலியலாளர் மாதவ் காட்கில், சூழலிய உணர்மிகு (Ecologically Sensitive) பகுதிகளைக் கையாள்வதில் அரசின் வினைமை பற்றித் தீவிரக் கவலைகளை எழுப்பியுள்ளார். அரசு அமைத்த இந்த மே.ம.சு.வ.கு., அதன் 2011 அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ் வரும் கேரளத்தின் பல பகுதிகளை சூழலிய உணர்மிகு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. “பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் சரி, சி.பி.ஐ.எம். ஆளும் மாநிலங்களும் சரி, மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் எங்கள் அறிக்கையை எதிர்த்தது,” என்கிறார் Rediff.com-இன் சையத் ஃபிர்தவுஸ் அஷ்ரஃப்பிடம் பேசிய காட்கில். உங்களைப் பொருத்தமட்டில் கேரளத்தில் என்னதான் தப்பு நடந்தது? ஏகப்பட்ட பிரச்...