நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்
நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ் ‘தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனி வகைமை இருக்கும் போது, அது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தோடு தொடர்பில்லாத தனியான ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அது நம் அன்றாட வாழ்க்கையோடு முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று.’ அமிதவ் கோஷ், தன் புதிய கட்டுரைத் தொகுப்பு நூலான, த கிரேட் டிரேஞ்ஜ்மெண்டில் (The Great Derangement), இன்றைய தட்பவெப்ப நெருக்கடியின் வடிவத்தில் மனித குலத்தை அதன் இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டு வந்துள்ள கதை சொல்லல், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் தோல்விகள் பற்றி ஆய்வு செய்கிறார். அந்த மெல்லிய தொகுதியின் வீச்செல்லை பரந்து விரிந்ததாக இருக்கிறது: மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு நடுவில், பொதுப்போக்குப் புதினங்களில் (mainstream novel) இயற்கையிலிருந்து தன்னை வேறாகப் பார்க்கும் நிலைக்கு மனிதகுலத்தைத் தள்ளிய கர்டீசிய இருமைவாதத்தின் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்; தட்பவெப்பப் பேரழிவைத் தன் குடும்பமே எப்படி எதிர்கொண்டது என்ற கதையைச் சொல்கிறார்; புயல் எழுச்சி ஏற்பட்டால் மும்பை போன்ற கடலோரப் பெருநகரத்துக்கு என்ன ஆகும்...