இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்

'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்டை போட்ட, இதுவரை ஒன்பது அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்த, முதிய-முதிர்ந்த பத்திரிகையாளர். ஏற்கனவே அமெரிக்காவின் பல பெரும் பெரும் பிரச்சனைகளைப் பற்றி விலாவாரியாக எழுதிக் கொட்டியவர். இதுவரை அவர் எழுதியுள்ள 18 நூல்களில் 12 அந்தந்தக் காலத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்தவை. கிட்டத்தட்ட அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளையும் பெற்றவர். இதழியல் துறை...

ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம்

நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள உழைக்கும் வெள்ளையர் இனத்தவருக்கான பட்டப்பெயர். அதாவது நாம் 'காட்டான்' என்கிறோமே, அது மாதிரியான ஒரு பெயர். கேரளாவில் நம்மை 'பாண்டி' என்கிறார்களே, பம்பாயில் இந்திக்காரர்களை 'பையா' என்கிறார்களே, அந்த மாதிரியும் சொல்லலாம். அதாவது, படிப்பறிவில்லாத, முரட்டு - முட்டாள் என்பது போன்ற எண்ணத்தில் உயர் வர்க்க வெள்ளையர்களால் இழிவாகச் சொல்லப்படும் விளிச்சொல். இவர்கள் எல்லோருமே பெரும்பாலும் ஸ்காட்லாந்து, அயர்லாந்...