அடுத்து...
எல்லாம் முடிந்த பின்பு என்ன நடக்கும்? மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் கூடி கொரோனுவுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம் மில்லியன் வருடங்களாகத் தம் மண்ணையும் மற்ற குடியினங்களையும் மனச்சாட்சியில்லாமல் அழித்தொழித்த அரக்கர்களை இதுவரை எது எதுவோ யார் யாரோவெல்லாம் அழிக்க முயன்று முடியாமல் போய் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவார்களென்றும் ஆசைப்பட்டுக் காத்திருந்து அதுவும் நடக்காமல் போய் இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா கடவுளே என்று எல்லோரும் வெதும்பிக் கிடந்த வேளையில் வாராது வந்த மாமணியாய் வந்திறங்கி அழித்தொழித்த கிருமியாருக்கு அது கூடச் செய்யவில்லையென்றால் எப்படி? சிலர் செய்த சேட்டைகளுக்கு பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அவர்களில் எல்லோரையும் கொன்று குவித்தது எப்படிச் சரியாகும் என்று அவர்களின் ஐ. நா. மன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு போர்க் குற்றங்கள் மீதான நேர்மையான விசாரணை ஒன்று நடந்தேறலாம் வெறுப்பு தலைக்கேறி கிருமிகளுக்குரிய அடிப்படை அறங்கூட இல்லாமல் இப்படி மனிதத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று அவர்களில் பலர் போருக்குப் பிந்தைய மன உளைச்சலில் தற்கொலை ...