நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்
Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்துக்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்... இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா? நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன். ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீ...