இடுகைகள்

2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

படம்
  "நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள் ஜோ மெக்கல க் | ஆகஸ்ட் 24, 2011 காமென் காலெவ் இயக்கிய “தி ஐலண்ட்” (The Island) திரைப்படத்திலிருந்து இது வேடிக்கையானதுதான், அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கி அறிமுகமே தேவையில்லாத ஒரு தலைசிறந்த மனிதரா அல்லது அவரது எண்ணற்ற ஈடுபாடுகளின் பரப்பு தெளிவான சுற்றுக்கோடு ஒன்றை வரையக் கோருகிறதா என்று என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எனது இந்தச் சமரசத்தை மன்னியுங்கள். திரைப்படம், சர்க்கஸ், இசை, ஊமம் (mime), கவிதை, நாடகம், டாரோ, அதற்கு மேல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக, வரைகதை (காமிக்ஸ்) ஆகியவற்றில் முதுவரான, 82 வயதான சிலி நாட்டின் மைந்தர், நான்கு மொழிகளில் புதிய அல்லது கூடிய விரைவில் வெளிவரப்போகிற பணிகளில் ஈடுபட்டிருக்கும் பெருமைக்குரிய இவரை இதுதான் என்று குறிப்பிட்டு வகைப்படுத்துவது பெரும் சிரமமாகவே உள்ளது. ஸ்பானிய வாசகர்கள் அவரது சமீபத்திய உரைநடைப் படைப்பான ‘மெட்டா ஹினியாலோஹியா’ (ஆங்கிலத்தில் ‘மெட்டாஜீனியாலஜி’) (மரியான் கோஸ்டாவுடன் இணைந்து எழுதியது) எனும் நூலை விரைவில் வாசித்து அனுபவிக்கலாம். இது, 20...

ரிச்சர்ட் டாக்கின்ஸ் - நேர்காணல்

  https://www.pbs.org/faithandreason/transcript/dawk-body.html ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பொதுப் புரிதல் (Public Understanding of Science ) பேராசிரியராக உள்ளார். சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களான "The Selfish Gene" (சுயநல மரபணு), "The Blind Watchmaker" (குருட்டுக் கடிகாரஞ்செய்பவர்), "Climbing Mount Improbable" (சாத்தியமின்மை மலை ஏறுதல்) உட்படப் பல புத்தகங்களை எழுதியவர். கேள்வி: பேராசிரியர் டாக்கின்ஸ் அவர்களே, மனிதர்கள் வெறும் "மரபணு இயந்திரங்கள்" (Gene Machines) என்ற உங்கள் நம்பிக்கையை விளக்க முடியுமா? திரு. டாக்கின்ஸ்: மனிதர்கள் வெறும் மரபணு இயந்திரங்கள் என்று நான் கூறும்போது, ​​"வெறும்" (just) என்ற சொல்லுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஒரு மரபணு இயந்திரமாக இருப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது, உண்மையில் மரபணு இயந்திரமாக இருப்பது ஓர் அழகு. அதன் பொருள் என்னவென்றால், இயற்கைத் தேர்வு, டார்வினிய இயற்கைத் தேர்வு, அனைத்து உயிரினங்களையும் அவை இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்...