இடுகைகள்

நாலாரம்

மன்னர் உள்ளே நுழையும் போதே அமைச்சர் சீவலப்பேரியாரின் பக்கம் திரும்பி: "அய்யர்வாள்! பாண்டியர்கள் ஏன் கொற்கையிலிருந்து கூடலுக்கு மாறினார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் உம்மிடம் இருக்கின்றனவா? அப்புறம் ஏன் தென்காசிக்கு மாறினார்கள்? இது பற்றியெல்லாம் இன்று இரவுக்குள் படித்து வந்து சொல்ல முடியுமா?" "கேள்விப்பட்டேன் அரசே! உங்கள் மனதில் ஓடும் குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நல்ல யோசனைதான். நாம் இப்போதே அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை. இரண்டு தலைநகரங்கள் வைத்துக்கொள்வோம்." "அதுவும் உம் காதுக்கு வந்துவிட்டதா? கெட்ட காதய்யா உமக்கு!" "நல்ல காதென்று சொல்லும் அரசே!"  அமைச்சரின் முகத்தில் அதே வழக்கமான பெருமிதப் புன்னகை. * ஆனால் அங்கிருக்கிற அரண்மனை அவ்வூர்க்காரர்களுக்குத் தம் ஊரும் ஒரு தலைநகர வரலாறு உடையதுதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எட்டயபுரத்து ஜமீனின் வடக்கு எல்லையாக இருந்ததால் இங்கும் ஓர் அரண்மனை கட்டினாராம் எட்டயபுரத்து மன்னர். முதலில் இரட்டைத் தலைநகரங்கள் வைத்துக்கொள்ள விரும்பித்தான் நாலாரத்தில் அரண்மனை கட்டினாராம். 12 மைல் தொலைவுக்கு அங்கி...

இதழியள்

  “ஐயோஓஓஓ! கடவுளேஏஏஏ! ஆஆஆ… என்னை விட்டுவிடு. ப்ளீஸ்ஸ்ஸ். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ். என்னை விட்டுவிடு.” வெள்ளைச்சட்டைக்காரன் கையெடுத்துக் கும்பிடுகிறான். கதறுகிறான். கெஞ்சுகிறான். ஆசிய முகம் போல் இருக்கிறது. அதனால்தான் கும்பிடுகிறான். குத்துபவன் நிறுத்துவதாக இல்லை. திரும்பத் திரும்பச் சதக் சதக் என்று குத்துகிறான். சகிக்க முடியவில்லை. மிருகம் போலக் குத்துகிறான். மிருகத்தை எதற்குக் கேவலப்படுத்த வேண்டும்! எந்த மிருகம் இப்படித் தன் இனத்து மிருகத்தையே கத்தியால் குத்துகிறது! ஐயோ எனக்குத் தலை சுற்றுகிறதே! பளிச் என்று வெள்ளைச்சட்டை வேறு போட்டிருக்கிறான். பளிச் வெள்ளையில் பளிச் சிவப்பு… பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே! நல்ல வேளையாகப் பாதியிலேயே ஒலி அணைக்கப்பட்டது. காட்சி மட்டுமே. மார்க் ஒரு சொடுக்குச் சொடுக்கி அந்தக் காணொளியை நிறுத்தினான். நான் வகுப்பறையில் இருக்கும் பெரிய திரைக்கு ஓரத்தில் நிற்கிறேன். “இதை அனுமதிக்கலாமா? கூடாதா?” இப்படிக் காணொளிகளை நிறுத்துவதையும் அடுத்து திரைக்கு ஓரத்தில் நிற்பவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதையும் ஓர் இயந்திரம் போலப் பழகியிருக்கிறான். எத்தனை ...