தம்பி புருசோத்தமா!!!
தம்பி புருசோத்தமா, இன்னும் சில மணி நேரங்களில் நீ உடலால் இந்த உலகத்தில் உள்ள எல்லோரையும் விட்டுப் பிரிந்து போயிருப்பாய். ஆனாலும் பலருடைய மனதில் அவரவர் வாழ்வின் இறுதிவரை இடம் பெற்றிருப்பாய். இன்று இருக்கிற அளவு வேதனையும் வலியும் அப்படியே இராது என்றாலும் எங்கள் எல்லோருக்குமே உன்னைப் பற்றிய நினைவுகள் அடிக்கடியோ அவ்வப்போதோ வந்து கொண்டேதான் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். எனக்கும் ஒரு காரணம் இருக்கிறது. என்னைப் பொருத்தமட்டில் என் வாழ்வில் நான் காணும் மிக நெருங்கிய அகால மரணம் இதுவே. எல்லோருக்குமே பள்ளிப்பருவத்தில் அப்படியான ஓர் அனுபவம் கிடைத்திருக்கும். எனக்கு அப்படி எதுவும் இருக்கவில்லை. நீ என் பால்யப் பருவத்து நண்பனல்ல; பள்ளி நண்பனல்ல; கல்லூரி நண்பனல்ல; ஒன்றாக உண்டுறங்கிய திருமணத்துக்கு முந்தைய இளமைக் காலத்து நண்பனுமல்ல. ஆனாலும் அப்படியான எத்தனையோ பேருக்குக் கொடுக்காத இடத்தை உனக்குக் கொடுத்திருந்தேன். அதற்கான ஒரே காரணம் – உன் கபடமற்ற மனமும் ஏமாளித்தனமுமே! அதனால்தான், அத்தனை நண்பர்கள் இருந்த சிங்கப்பூரில், குடும்பத்தை ஊரில் விட்டுவிட்டு வந்தபின், ஊரைக் காலி செய்வதற்கு...