ஏதாவது

எனக்கு
உன்னைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது

அதற்கு
நீ ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா?

ஏதாவது...

இது அது என்றில்லை
ஏதாவது செய்

எதுவும் செய்யாதிருத்தலையும் புகழப் பழகும்வரை
ஏதாவது
செய்து கொண்டேயிரு

ஏதாவது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்