யாதும் ஊரே: அமேரிக்கா 2
சென்ற பாகத்தில் அமேரிக்கா பற்றிய அறிமுகத்தையே முடிக்கவில்லை. அதை முடித்துவிட்டுத்தானே அமேரிக்காவில் எங்கே வந்து இறங்கினோம் என்பதைப் பற்றிப் பேச முடியும்! அமேரிக்கா என்றாலே நமக்கு முதலில் கண்ணில் வருவது அந்தச் சுதந்திர தேவி சிலையும் அங்கே தென்படும் குளிருக்கான பல அறிகுறிகளுமே, இல்லையா? பனி சொட்டும் மரங்கள், குளிருக்கு உடலை முழுக்க மறைத்து உடையணிந்து நடமாடும் மனிதர்கள், அவர்களின் தலைகளில் இருக்கும் குல்லா ஆகியவைதானே! ஆனால் அது மட்டும் அமேரிக்கா இல்லை. அமேரிக்கா என்பது ஒரு பரந்து விரிந்த பெரும் நிலப்பரப்பு. இந்தியாவை எப்படித் துணைக்கண்டம் என்கிறோமோ அது போலவே இதுவும் ஒரு துணைக்கண்டம்தான். நிலப்பரப்பில் இந்தியாவைவிடப் பல மடங்கு பெரிய நாடு. பருவநிலைகளும் நில அமைப்பும் கூட இந்தியாவைவிடப் பல மடங்கு விதவிதமானது. ஆனால் இந்தியா போல் பரந்த பண்பாடுகளைக் கொண்ட நாடு என்று சொல்ல முடியாது. அதனால் அமேரிக்கா ஒரு துணைக்கண்டம் என்று சொல்வதைத் தாங்கிக்கொள்ள முடியாது போகலாம் உங்களுக்கு. இங்கேயும் உலகெங்கும் இருந்து வந்து வாழும் பல்வேறு இனக்குழுவினர் - மொழியினர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நம்மைப் போ...