மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)

அவளின் கடைசி மூச்சு அவள் நுரையீரலை நிறைக்கிறது
பொம்மைப் பேழைக்கு மேலே கால்கள் மிதக்கின்றன
சிவப்புச் சீலை அவள் கழுத்திலிருந்து அவிழ்கின்றது
கொரியப் பாப் பாடல் திரும்பத் திரும்பத் திருப்பி ஒலிக்கிறது
கண்ணீர் தவழ்ந்து மேலேறி அவள் கண்ணுக்குள் நுழைகின்றன
துயரம் குருடாக்கும் கோபமாக மடிப்பவிழ்த்துக்கொள்கிறது
காகிதத்தின் கறைபடிந்த எழுத்துக்கள் கண்ணுக்குள் வருகின்றன
அந்த எண்ணம் அவள் மனதை நீங்குகிறது
கதவுகள் படார் படாரென்று திறக்கின்றன
சொற்கள் வாய் பிளந்து உள்நுழைந்து பற்றியெரியும் வயிற்றுக்குள் அடங்குகின்றன
என்னுடன் அவளுடைய கடைசிச் சண்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறாள்
அது எனக்கு இன்னும் தெரியாது
நான் உன்னை வெறுக்கிறேன், படாரென்று வாய் திறந்து உள்ளே போய்விடுகிறது
அவள் தட்டிவிட்ட கைவினை இளஞ்சிவப்பு வாலெண்டைன் அட்டை
தரையிலிருந்து தாவி மேசை மேல் இடம் கொள்கிறது
யாருக்குமே புரியல
யாருக்குமே தெரியல
யாருமே காது கொடுக்கிறதில்ல
யாருக்குமே அக்கறையில்ல
யாருக்குமே என்னைப் பிடிக்கல
நான் நாதியற்றவள்
என்று கக்கியவற்றை விழுங்கிக்கொண்டு
விரைந்து பின்செல்கிறாள்
அவள் என் கதவை மூடித் திறக்கிறாள்
என் தங்கை இன்னும் இருக்கிறாள்

மூலம்:
Palindrome
by Anna Akana
(after Lisel Mueller)

Her last breath slowly fills up her
lungs. Feet float to the top of the
toy chest. Red scarf unwinds
itself from her neck. The Korean pop song unplays
on a loop. Tears crawl back up their paths into
her eyes. Sadness unfolds itself to blinding anger.
The paper’s blotchy letters come into focus.
The idea leaves her head.
Doors unslam. Words claw back into her mouth,
settling in the fire of her gut. She’s having her last
fight with me, but I don’t know that yet. I hate you,
slams back into my mouth. The pink homemade Valentine’s
card she knocked over leaps from the floor and into
place on my desk. She paces backwards, swallowing
the vomit of
no one understands no one knows no one listens
no one cares no one loves me I’m alone
She unopens my door.
I have a sister still.








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி