இடுகைகள்

முதலிலிருந்து தொடங்க வேண்டும்...

நீயில்லாமல்  நான் இருக்க முடியவில்லை என்பது மட்டுமில்லை என்னோடே நீ இருக்க வேண்டுமென்று மட்டுமில்லை நானில்லாமல்  நீ இருப்பதையும் மணித்துளிகள் கூட ஏற்றுக் கொண்டு இருக்க முடியவில்லை நீ இருக்குமிடத்திலெல்லாம் நானும் நிறைந்திருக்க வேண்டும் என்றுமல்லவா தோன்றுகிறது?! சேர்ந்து பிறக்கவில்லை சேர்ந்தே வளரவில்லை சில மணி நேரங்கள் கூட சேர்ந்து இருந்ததில்லை நீயில்லாமற்தான்  இத்தனை ஆண்டுகள் எனக்கும் நானில்லாமற்தான்  இத்தனை ஆண்டுகள் உனக்கும் ஓடியிருக்கின்றன ஆனாலும்  அப்படியென்ன பொறுக்க இயலாமை?! உன் பிறப்பு முதலான எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும் நானும் பழக்கப்பட வேண்டுமென்றும் மொத்தப் பயணத்தையும் முதலிலிருந்து தொடங்கி உடன் வர வேண்டுமென்றும்... என் பிறப்பு முதலான எல்லா இடங்களுக்கும் முகங்களுக்கும் உன்னையும் பழக்கப்படுத்த வேண்டுமென்றும் மொத்தப் பயணத்தையும் முதலிலிருந்து தொடங்கி உடன் வரவைக்க வேண்டுமென்றும் ...

பால்ய மணம்

எல்லாத் திருமணங்களையும் போலவே என் பெற்றோருடையதிலும் ஏகப்பட்ட ஓட்டைகள், சமரசங்கள், பிரச்சனைகள். என் தாத்தாவின் தரத்தைப் பார்த்து அவருடைய பையனின் தரத்தை எடை போட்டு, பெண்ணைக் கொடுத்து ஏமாந்தவர் என் தாய்வழித் தாத்தா. தரமில்லாத மாப்பிள்ளைக்குப் பெண்ணைக் கொடுத்து விட்ட ஒரே தவறுக்காக காலம் முழுக்க என் தந்தையாரையும் அவருடைய பிள்ளைகளையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கும் அவருடைய பையன்களுக்கும். நான்கும் ஆண் குழந்தைகளாகிப் போனதில் என் தாய்க்கு ஒரு வசதி. பிள்ளைகள் அனைத்துமே தாயையும் தாய் சார்ந்த உறவினர்களையும் சார்ந்து வாழப் பழகி விட்டன. விபரம் தெரிகிற வயதில் உயிரோடிருந்ததாலும், அள்ளிக் கொட்டிய பாசத்தாலும் தாத்தா-பாட்டி என்பதெல்லாம் தாய் வழியில் மட்டுமே மனதில் நின்றன. பெண்பிள்ளைகள்தாமே முதலில் பேரன் பேத்தி கொடுப்பவர்கள், எல்லாத் தாத்தா பாட்டிகளுக்கும்! சித்தப்பாமார்கள் அனைவரும் உதவுகிற நிலையில் இல்லாததாலும் மாமாமார்கள் அனைவரும் உதவ முடியாத நிலையில் இல்லாததாலும் நாங்கள் ஒரு பக்கம் சாய்ந்தது தவிர்க்க முடியாதது. தந்தை வழிச் சொந்த பந்தங்கள் அனைத்தும் இழவு வீடுகளில் மட்டுமே பார்க்க முடிந...

நல்லோர் ஒருவர் உளரேல்...

ஏமாந்து அடிபட்டு மிதிபட்டு அவமானப் பட்டு இதற்கு மேலும் நல்லவனாயிருப்பது நல்லதற்கல்ல என்று தன்பரிதாபத்தில் தடம் தப்பப் போகையிலெல்லாம் உன்னைப் போல் ஒருத்தனோ ஒருத்தியோ வந்து விடுகிறீர்கள் இந்த உலகத்தில் இன்னும் நல்லோர் பலர் உளர் என்றும் சிறுமைகளின் போதெல்லாம் நான் நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்ளுமளவுக்கு நானொன்றும் உங்களைக் காட்டிலும் நல்லவனில்லை என்றும் உங்களுக்காகவாவது இப்படியேவாவது நான் இருந்து தொலைந்து விட வேண்டுமென்றும் நினைவுபடுத்திக் கெடுத்து விடுகிறீர்கள்!

ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!

இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல் இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிட...

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... குதிரைகள் இங்கிலாந்தில் இன்னும் குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் நிறைய இருப்பது போற் தெரிகிறது. நகரத்துக்குள்ளேயே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் ஒருவேளை இதை விட அதிகமாக இருக்கக் கூடும். ஓட்டுனர் உரிமத்துக்காக வண்டி ஓட்டிப் பழகும் போது கூட குதிரை வண்டிகள் வரும் போதும் குதிரை வரும் போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விலாவாரியாகப் பாடம் எடுக்கிறார்கள். நம்ம ஊரில் மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகள் போல இருக்கலாம் என்று நினைக்கிறேன். தினமும் ராணியின் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ...