இடுகைகள்

காஸ்ட்லி ஆசை

இளையவன் அது வேண்டுமென்று கேட்டு இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டன இந்த மாதமும் கையைக் கடிப்பதால் அடுத்த மாதச் சம்பளம் வரை காத்திருக்க வேண்டும் போல் தெரிகிறது வேலைக்காரம்மா வீட்டு இளையவனும் அது வேண்டுமென்று கேட்டு அடம் பிடித்தழுதான் அன்று அவரோ மூத்தவன் படித்து முடித்து வேலைக்குப் போய் முதல் மாதச் சம்பளத்தில் வாங்கிடலாம் என்று சொல்லித் தேற்றிவிட்டார் எங்கள் வீட்டு மூத்தவனைப் போலவே இரண்டு வருடந்தான் மூத்தவன் அவனும்!

சாதிக் கட்சி

சாதியின் பெயரிலும் நடத்தலாம் மதத்தின் பெயரிலும் நடத்தலாம் இனத்தின் - மொழியின் பெயரிலும் நடத்தலாம் சித்தாந்தங்களின் பெயரிலும் நடத்தலாம் ஒரு மண்ணும் இல்லாமல் வெளிப்படையாகவே வயிற்றுப் பிழைப்புக்காகவும் நடத்தலாம்!

மழைக் காதல்

மழைக்கும் காதலுக்குமான உறவுதான் என்ன? ஜில்லென்ற சூழலும் அது தரும் ஜில்லென்ற உணர்வும் அது போன்றதேயான ஜில்லென்ற நினைவுகளைக் கிளர்வது தவிர்த்து வேறேதும் இருக்கிறதா?! மழையில் நனைந்த காதலர் மட்டுமா மழை கண்டு கிளர்ச்சியுறுகின்றனர்?! காதலில் நனைந்த எல்லோருந்தானே மழை காணும் போதெல்லாம் மீண்டும் ஒருமுறை நனைந்து கொண்டாடிக் கொள்கின்றனர்! மழை மண் வாசத்தை மட்டுமா கிளப்புகிறது? கூடவே அது போலவே நெடுங்காலமாய் அடங்கிக் கிடக்கும் மன வாசங்களையும் அல்லவா கிளப்பி விடுகிறது! இந்தக் கிளப்பி விடுதலில்தான் காதலரெல்லோரும் மழை மீது காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?! இங்கிருந்த நீர்தான் இடையில் இல்லாமல் போயிருந்தது அதை மட்டுமா இப்போது மாரியாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது? அது போலவே கூடவே இருந்து பின்னர் இல்லாமல் போனவற்றையுந்தானே நினைவுகளாய் மாற்றி வந்து பொழிவிக்கிறது! இந்தப் பொழிவித்தலில்தான் காதலரெல்லோரும் மழை மீது காதல்வயப்பட்டுவிடுகின்றனரோ?! காய்ந்து கிடந்தவர் நனைந்து களிக்கையில் காய்ச்சல்தானே வரும்! சிலருக்கோ நனைந்த களிப்பினும் பெருங்களிப்பு அதையடுத்து வரும் காய்ச்சல...

சதைப்பற்று

காமம் காய்ந்து மட்கும் சதை காதல் எளிதில் மட்காத எலும்பு சதையற்ற எலும்பு சாவுக்குப் பின்தான் சாத்தியம் எலும்பற்ற சதை எதைப் பற்றி நிற்கும்? எலும்புக்கு மேலாக இருந்துவிட்டுத்தான் போகட்டுமே அதுவே அதனை ஒருபோதும் எலும்புக்கு மேலானதாக்கி விடாதே!

நெனப்புதான்...

ஒவ்வொரு டிரிங் டிரிங்கும் உன் அழைப்பாகத்தான் இருக்கும் என்று  எண்ணி எண்ணி ஏமாந்தபின் எண்ணிக் கொள்கிறேன்... என்னை ஏமாற்றிய இந்த அழைப்புகள் ஒவ்வொன்றின் போதும் நீயும் என்னை  அழைக்க எத்தனித்து எத்தனித்து மனதை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும் என்று!

வெறுப்பு விளையாட்டு

இருந்ததே ஐவர்தாம் அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது? நீங்கள் நால்வரும் நிம்மதியாக இருந்த என்னை ஒன்று கூடி வெறுத்திராவிட்டால் ஒதுக்கியிராவிட்டால்... நான் ஏன் உங்களுக்குள் சண்டை மூட்டியிருக்கப் போகிறேன்! முதன்முதலில் இருப்பதிலேயே பலவீனமான ஐந்தாமவரை அடித்துத் துரத்தத்தான் உணர்வாளர்கள் நாம் நால்வரும் ஒன்றிணைந்தோம் கூட்டு முயற்சியில் அதை வெற்றிகரமாகச் செய்தும் முடித்தோம் அடுத்ததாக நால்வர்தாம் நாம் அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வந்தது? அப்போது எளிதில் வீழ்த்த முடிந்த நான்காமவரைத்தான் நாம் எல்லோரும் இணைந்து அழித்தோம்! ஆயிரம் இருந்தாலும் நாம் மூவரும் ஒருதாய் மக்கள் இல்லையா? முடிவில் மூவர்தானே இருக்கிறோம்? அதற்குள்ளும் எதற்கு வெறுப்பு வருகிறது? வராமல் எப்படி இருக்கும்? யாருக்கு மறந்தாலும் முதன்முதலில் உங்களின் வெறுப்பு விளையாட்டுக்கு இரையான என்னால் எப்படி எதையும் மறக்க முடியும்? அப்படியே நான் மறந்தாலும் உணவு, உடை, உறைவிடம் போல் வெறுப்பும் அடிப்படைத் தேவையாகிவிட்ட வாழ்வைப் பழகிவிட்ட நீங்கள் மறந்து...

தேர்தல்

ஒவ்வொரு தேர்தலும் நம் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் அம்பலப்படுத்தியதைவிட நம்மையும் நம்மைச் சுற்றியிருப்பவர்களையுந்தான் அதிகமாக அம்பலப்படுத்தி விடுகிறது நாட்டு நலனோ வீட்டு நலனோ பாதிக் கடவுளாகிவிட்ட யாரோ ஒரு தலைவர் மீதான நம் தகுதிக்கு மிஞ்சிய விருப்பும் வெறுப்பும் நம் இழிவான பல நியாய உணர்ச்சிகளுக்கு வெளிச்சம் பாய்ச்சி விடுகின்றன அரசியல் பேசி அடைந்த உறவுகள் எத்தனை இழந்த உறவுகள் எத்தனை கூட்டிக் கழித்துப் பார்த்தால் எல்லோருக்குமே இழப்புக் கணக்காகத்தான் இருக்கிறது இழிவான மனிதர்களை இனம் கண்டு கொண்டு விட்டதாக வெளியில் நன்றி கூறி நகர்ந்தாலும் கூட அந்த ஒரேயோர் உரையாடலை மட்டும் தவிர்த்திருந்தால் அன்று தவிர்த்து என்றுமே வெளிவந்திட வாய்ப்பிராத அவர்களின் இழிவான முகத்துக்கு மேடை அமைத்துக் கொடுத்த இழிவில் இருந்து தப்பியிருக்கலாமோ என்று ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்பும் வரும் உணர்ச்சிகள் வடிந்த ஒரு பின்னிரவில் தோன்றித்தானே தொலைக்கிறது!