சதைப்பற்று

காமம்
காய்ந்து மட்கும் சதை

காதல்
எளிதில் மட்காத எலும்பு

சதையற்ற எலும்பு
சாவுக்குப் பின்தான் சாத்தியம்

எலும்பற்ற சதை
எதைப் பற்றி நிற்கும்?

எலும்புக்கு மேலாக
இருந்துவிட்டுத்தான் போகட்டுமே

அதுவே
அதனை
ஒருபோதும்
எலும்புக்கு மேலானதாக்கி விடாதே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்