இடுகைகள்

தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை கோபக்காரன் திமிர் பிடித்தவன் பொறுப்பற்றவன் சோம்பேறி என்று மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும் சொல்லித் திட்ட பெரும் தாயுள்ளம் வேண்டும்

நாயே

எவரையும் எளிதில் நாய் என்றிடுகிறீர்கள் நன்றியுடைமை நக்குதல் குரைத்தல் கடித்துக் குதறுதல் இடமறிந்து வாலாட்டுதல் இவை தவிர நாய்கள் பற்றி வேறேதும் இல்லையென்று எ...

அன்பு

நீ மிதமிஞ்சிச் செலுத்திய நஞ்செல்லாம் என் பாதி உயிரைக் குடித்தபின்தான் உணர்த்தின அவை யாவும் அளவுக்கு மீறிய அமிர்தத்தின் மறு வடிவம் என்று

திருடர் நீதி

எல்லோரும் திருடர்கள்தாம் அதற்காக... என்னை வாழவைக்கும் திருடன் என்னைக் கேள்வி கேட்கும் திருடன் பேசாமல் தானுண்டு தன் திருட்டுண்டு என்றிருக்கும் திருடன் எல்லோரும...

தலைவன்

அகநானூற்றுத் தலைவன் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் தன்னையே கொடுத்து ஏமாந்தாள் தலைவி வீட்டைவிட்டு வெளியே வந்ததும் அகமொன்று வைத்துப் புறமொன்று பேசாத புறநானூற்றுத் தலைவன் இங்கும் அதே போல் உனக்காக உயிரையே கொடுப்பேன் என்றான் கேள்வி கேட்காமல் மண்ணைக் கொடுத்து ஏமாந்தான் தொண்டன் கொடுப்பேன் என்று சொல்லாமல் கொடுத்தவர் என்றோ ஒருநாள் புரட்டப்படும் வரலாறானார் கொடுப்பேன் என்று சொல்ல மட்டும் செய்தவர் வரலாற்றையும் மாற்றி எழுதவல்ல தலைவரானார்

நெனப்பு

பூனை தன்னைப் புலியாக நினைத்துக் கொண்டு பாய்ந்த போது எலி இரையாகும் முன் தன்னை மானாக எண்ணிக் கொண்டது

அறிவாயுதம்

அறிவு பெரும் ஆயுதந்தான் தன்னையும் தன் பிள்ளைகளையும் மட்டுமே காத்துக் கொள்ளும் மடக்குக் கத்திகளும் உள மண்ணைக் காக்கும் போர்வாட்களும் உள உயிர்காக்கும் சிகிச்சைக்குப் பயன்படும் அறுவைக் கத்திகளும் உள வெற்று மிரட்டல்களுக்கும் வேடிக்கை காட்டவும் நடிப்புக்கும் மட்டுமே பயன்படும் அட்டைக்கத்திகளும் உள இதில் எது உன் ஆயுதம்?