நாத்திகம் - இன்னொரு மதம்!
இந்தக் கேள்விக்கு நம் வாழ்நாளில் என்றும் ஓர் உறுதியான விடை கிடைக்காமல் போகலாம் அல்லது இந்தப் பூவுலகில் பிறக்கும் எவருக்குமே முற்றிலும் ஏற்றுக் கொள்ளத் தக்க மாதிரியான ஒரு பதில் கிடைக்காமலே போகலாம். கேள்வி? கடவுள் இருக்கிறாரா? தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைக் கண்டால் குழப்பமான பதிலே கிடைக்கிறது. இல்லை என்பதற்கான ஏற்கத் தக்க தர்க்க ரீதியான விளக்கம் கிடைக்காத போது என் பதில் நேர்மறையாக உள்ளது. இருக்கிறது என்பதற்கான ஏற்கத் தக்க ஆன்மீக விளக்கம் கிடைக்காத போது என் பதில் எதிர் மறையாக உள்ளது. உங்கள் விளக்கம் என்னவாக இருந்தாலும், நான் உறுதியாக நினைப்பது என்னவென்றால், இந்த உலகம் இவ்வளவு குழப்பங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வலிகளுக்கும் வன்முறைகளுக்கும் போர்களுக்கும் பசிக்கொடுமைக்கும் தகுதியானதில்லை. பிறந்த குழந்தை முதல் (இன்னும் சொல்லப் போனால் வயிற்றில் இருக்கும் கரு முதல்) பெண்கள் வரை - தள்ளாத முதியோர் வரை எல்லோருமே இவற்றை அனுபவிக்கிறார்கள் என்பது அதை விடக் கொடுமை. சரியான தர்க்க விளக்கம் இல்லை எனும் போது, என் ஆத்திக நண்பர்கள் சொல்...

Thanks zephyr. :)
பதிலளிநீக்கு