சாம, தான, பேத, தண்டம்
சாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக...