கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 5/9
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... இலண்டனில் மற்றவர்கள் எந்தப் பெருநகரமும் அது கிராமமாக இருந்த காலத்தில் இருந்து இருப்போர் மட்டுமே கொண்டு இருப்பதில்லை. எல்லோரும் உள்ளே வருவதால்தான் அது நகரமாகிறது - பெருநகரமாகிறது. எல்லோரும் சேர்ந்துதான் ஒரு பெருநகரத்தைக் கட்டியெழுப்புகிறார்கள். எந்த நகரத்திலும் வெளியோர் வந்து எடுத்துக் கொண்டு மட்டும் ஓடிவிடுவதில்லை. தம் உழைப்பையும் திறமைகளையும் கொடுத்துத்தான் பதிலுக்கு எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு இலண்டனும் விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப் போனால், வெள்ளைக்காரர்கள் எங்கெல்லாம் போய் கொள்ளைய...