எந்த ஆர்வம் எதற்காக?

"எனக்கு அரசியலில் ஆர்வம் அதிகம்"
இந்த ஒற்றைச் சொற்றொடருக்குப் பின்னால் 
ஒளிந்திருக்கும் அர்த்தங்கள்தாம் எத்தனை? 

சாதி போதை
மத போதை
மத போதை என்ற பெயரில் ஒளிந்திருக்கும் சாதி போதை
மொழி போதை
இன போதை
இனம் புரியாத தனி மனித போதை

ஏதோவொரு காரணத்துக்காக 
எந்தத் தகுதியுமற்ற தம்மோடு 
ஊர்ப்பணத்தைப் பகிர்ந்து கொண்ட 
தலைமை மீதான நன்றி போதை

இவையெல்லாவற்றுக்கும் மேலாக
ஒரு திரைப்படம் பார்ப்பதில்
ஒரு புதினம் படிப்பதில்
நாய்ச்சண்டை-நரிச்சண்டை காண்பதில் 
கிடைக்காத பொழுதுபோக்கு 
இதில் கிடைக்கிறதே என்கிற போதை

இப்படி 
ஏதேதோ விதமான எண்ணற்ற போதைகளுக்கு மத்தியில் 
இன்னும் எப்படியாவது 
இந்தச் சமூகத்தில் வாழும் எல்லோர்க்கும் 
கண்ணியமான வாழ்க்கையொன்றைப் பெற்றுக் கொடுத்திட வேண்டும் என்கிற போதையோடு வாழும் 
ஒரு மிகச் சிறிய பிழைக்கத் தெரியாக் (!) கூட்டமும் 
அப்படிச் சொல்லிக் கொண்டு திரிகிறது

எப்படித் தெரிந்து கொள்வது 
எந்த ஆர்வம் எதற்காகவென்று?!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாம, தான, பேத, தண்டம்

உயர் தனிச் செம்மொழி?!

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்