பிடித்தலும் பிடிக்காதலும்

உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடித்ததும்
எனக்குப் பிடித்ததெல்லாம்
உனக்கும் பிடித்ததும்
உனக்குப் பிடிக்காததெல்லாம்
எனக்கும் பிடிக்காமல் போனதும்
எனக்குப் பிடிக்காததெல்லாம்
உனக்கும் பிடிக்காமல் போனதும்
இந்த விளையாட்டின் ஆதி நுட்பங்கள்

உனக்குப் பிடிக்காதவர்களும்
எனக்கும் பிடிக்காமல் போனது
ஏற்றுக் கொள்ள இயலாததோர் இலக்கணமாகத்தான் இருக்கிறது
இன்னமும்

இவையெல்லாம்
சிறிது முற்றிய நிலையில் நிகழ்கிற பிறழ்ச்சிகள் என்று
விட்டு விட்டுப் போய்விடலாந்தான்

ஆனாலும்
ஒரேயொரு கேள்வி மட்டும்
அறுத்துக் கொண்டே இருக்கிறது
இன்னமும்

அதன்படியே
உனக்குப் பிடிக்காத என்னையும்
எனக்குப் பிடிக்கவில்லை இப்போது!

அப்படியானால்
எனக்குப் பிடிக்காத உன்னையும்
உனக்குப் பிடிக்காமல் போயிருக்க வேண்டுமே?!

போயிருக்கிறதா?!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

நாத்திகம் - இன்னொரு மதம்!

வைகோ என்றோர் அரசியல் ஏமாளி