செருப்பு நின்னா செருப்ப ஆதரிப்போம்! வெளக்கமாறு நின்னா வெளக்கமாற ஆதரிப்போம்!!
சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது சீமான் பேசிய வசனங்களிலேயே பிடித்தது, "காங்கிரசுக்கு எதிரா யார் நின்னாலும் ஆதரிப்போம். செருப்பு நின்னா செருப்ப ஆதரிப்போம். வெளக்கமாறு நின்னா வெளக்கமாற ஆதரிப்போம்" என்றதுதான். எல்லாத் தேர்தல்களிலுமே அப்படியொரு தெளிவான முடிவை வைத்துக் கொண்டு தான் எல்லோருமே யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்கிறோம். பெரும்பாலானவர்கள் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ செருப்பை நிறுத்தினால் செருப்புக்கும் வெளக்கமாறை நிறுத்தினால் வெளக்கமாறுக்கும் வாக்களிப்போராக இருக்கின்றனர். அவ்விரு கட்சிகளையும் தவிர்த்து அமைகிற அணி, செருப்பை நிறுத்தினால் செருப்புக்கும் வெளக்கமாறை நிறுத்தினால் வெளக்கமாறுக்கும் வாக்களிக்கத் தயார் என்ற ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறோம் இம்முறை. அப்படித்தான் மதவாத-இனவாத அரசியற் கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கூட நிறையப் பேர் பிடிவாதமான முடிவு எடுத்துள்ளார்கள். "என் மதத்துக்காக - இனத்துக்காகக் கத்துவது செருப்பாக இருந்தால் செருப்பையும் வெளக்கமாறாக இருந்தால் வெளக்கமாறையும் ஆதரிப்பேன்" எனும் தெளிவு. அப்படி ஒத்துக் கொண்டு ஆதரிப்பது ஒருவிதம். அது செருப்பில்லை...