வட்டத்துக்கு வெளியே

உங்கள் வட்டத்துக்குள்
வந்து வாழ்ந்து பார்த்தால்தான்
உங்கள் நியாயங்கள் புரிபடும்
என்பது புரிகிறது

ஒவ்வொரு வட்டத்துக்கும்
தனித்தனி நியாயங்கள்
இருக்கின்றன என்பதால்

ஒரு வட்டத்துக்குள் வந்து
சிக்கிக் கொண்டு விட்டால்
பிற வட்டங்களின் நியாயங்கள்
புரிய முடியாது போய்விடும் என்பதால்

நாளை நானும்
பிற வட்டங்களை
இருக்க விடுவதே தவறு என்று கூட
நியாயம் பேசத் தொடங்கி விடுவேன் என்பதால்

வட்டங்களுக்கு வெளியிலேயே
வாழ்ந்துவிட்டுப் போகிறேன்
விடுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்

சாம, தான, பேத, தண்டம்