இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஐ. நா. ஆட்சி மற்றும் அலுவல் மொழிகள்

உலகில் மொத்தம் 6500 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் பெரிதளவில் பேசப்படும் மொழிகள் (பெரிய மொழிகள் என்று வைத்துக்கொள்வோம்) அனைத்தும் மொத்தமாக 11 மொழிக் குடும்பங்களுக்குள் அடைக்கப்படுகின்றன. அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமே மிகப் பெரியது. உலக அளவில் அதிகமாகப் பேசப்படும் மொழி என்றால் முதலில் ஆங்கிலம் வருகிறது. அடுத்ததாக மாண்டரின், இந்தி ஆகியவை வருகின்றன. ஆங்கிலத்துக்கும் இந்திக்கும் மற்றவர்களும் பேசுவதால் இந்த இடம். தாய்மொழி என்ற கணக்குப்படி பார்த்தால், முதலில் மாண்டரினும் அடுத்து ஸ்பானியமும் வருகின்றன. அதன் பின்னரே ஆங்கிலமும் இந்தியும். இது ஒரு புறம் இருக்க, உலக நாடுகளையெல்லாம் ஒன்றிணைக்கும் ஐக்கிய நாடுகள் (ஐநா) மன்றம் தன் ஆட்சி (official) மற்றும் அலுவல் (working) மொழிகள் என்று சிலவற்றை அறிவித்திருக்கிறது. அதில் தம் மொழியையும் புகுத்திவிட வேண்டும் என்று எல்லா நாடுகளும் அவர்களால் முடிந்த வேலைகளைச் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனாலும் ஐநா சில அடிப்படைகளின் அடிப்படையிலேயே இம்மொழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. அம்மொழிகள் யாவை? அவ்வடிப்படைகள் யாவை? மொழிகள்: 1. அரேபியம் 2....

நாய்கள்

மனிதரில் சிலருக்கு நாய்கள் என்றால் பயம் எனவே நாய்களில் சிலவற்றுக்கு மனிதர்களைக் கண்டால் இளக்காரம்

கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Aliens)

வேற்றுலகவாசிகள் (aliens) பற்றி இந்த உலகத்தில் எவ்வளவோ பேசவும் எழுதவும் பட்டுவிட்டது. நிறைய ஆங்கிலப் படங்களும் வந்திருக்கின்றன. மனிதர்களைப் போலவோ மனிதர்களைவிடவும் ஆற்றல் மிக்கவர்களோ இம்மாம் பெரிய அண்டத்தில் இருந்தே தீர வேண்டும் என்றுதான் நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பேரண்டத்தில் நம் பூமி எவ்வளவு சிறியது என்பதை வைத்துப் பார்த்தால், உயிர்கள் வாழும் கோள்கள் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பால் வழியில் இருக்கும் மற்ற சூரிய மண்டலங்களிலோ பேரண்டத்தின் வேறு விண்மீன் மண்டலங்களிலோ நிச்சயமாக உயிரினங்கள் இருக்கத்தான் வேண்டும். அவை மனிதர்களைப் போலவே அல்லது மனிதர்களைவிட ஆற்றல் மிக்கவையா என்பதுதான் தெரியவில்லை. உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கணக்கின் படியே மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லலாம். மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் மனிதர்கள் அடையும் தொலைவில் இல்லை என்று ஓரளவு நம்பிக்கையோடு சொல்லலாம். ஏனென்றால், மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் இந்நேரம் அவர்கள்...

கடிதங்கள் கழிதலும்

எனக்குச் சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அது என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்தது. என் தாத்தா முதலில் காந்தியடிகளையும் பின்னர் நேதாஜியையும் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காந்தியைப் போலவே அவரின் தொண்டர்களும் கடிதம் எழுதுவதில் ஆர்வமுடையவர்கள் என்பார்கள். சிறு வயதிலிருந்தே தாத்தா எழுதிய பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் பற்றி வீட்டில் அடிக்கடிப் பேசக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், தாத்தாவின் சீடர்களான சித்தப்பாக்கள் சிலரும் அப்படியே கடிதங்கள் எழுதுபவர்களாக இருந்தது, எனக்கும் கடிதங்கள் மீது அளவில்லா ஈடுபாட்டைக் கொடுத்தது. ஆண்டுக்கு ஒரு முறையோ அதைவிடவும் குறைவாகவோ சந்திக்கும் சில உறவினர்களோடு பேசும் போது, அவர்களுடனேயே இருந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நமக்கும் படிக்க எவ்வளவோ கொட்டிக் கிடப்பது போல இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேறு யாரோ அல்லர்; நம்மில் ஒருவர் - நம்மைப் போன்ற பின்னணியிலேயே பிறந்து வளர்ந்து சாதித்திருப்பவர்கள். அவர்களின் சாதனைக் கதைகளைக் கேட்கும் போது நா...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்துக்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்... இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா? நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன்.  ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீ...

உங்கள் ஊர்

வணக்கம். என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாகலாபுரம் என்னுமொரு செம ஊர். என் ஊரைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எங்கள் ஊரைவிட நல்ல ஊர் இந்த உலகத்தில் இருக்குமா என்றொரு சந்தேகம் கூட எனக்கு உண்டு. உங்கள் ஊர் எப்படி? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். ஊர் என்றதும் உங்களுக்கு எந்த ஊர் நினைவுக்கு வருகிறது? நீங்கள் பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? உங்கள் தந்தையின் ஊரா? தாயின் ஊரா? சொந்தமாக வீடு கட்டிய/வாங்கிய ஊரா? இது எல்லாமே ஒரே ஊர்தான் என்றால் நீங்கள் பாக்கியவன்தான். எனக்குத் தெரியும். நீங்கள் 5 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையில் அதிக காலம் வாழ்ந்த ஊர் எதுவோ அதைத்தான் சொல்வீர்கள். சிலர் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்குச் சென்ற பாட்டி ஊரைச் சொல்வார்கள். நீங்கள்? உங்கள் ஊர் கிராமமா? நகரமா? இரண்டுக்கும் இடையிலா? உங்கள் ஊரில் உள்ள எல்லோருக்குமே எல்லோரையும் தெரியுமா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூடத் தெரியாதா? இந்த ஊர் இதைவிடச் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்குமே! அப்படி உங்...

அடுத்து?

தெற்குத்தெரு ஆவுடையம்மாள் தலையில் அடித்துக் கதறிக்கொண்டு எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தார். அவர் கதறிக்கொண்டு வந்த வேகத்தையும் சத்தத்தையும் பார்த்தால் பாட்டியை அடித்துக் கொல்லத்தான் போகிறார் என்று பட்டது. அடுத்த நிமிடமே அடுப்பு வீட்டிலிருந்த அம்மாவும் கதறிக்கொண்டு பாட்டியையும் ஆவுடையம்மாளையும் நோக்கிப் பாய்ந்து வந்தார். பாட்டியைக் காப்பாற்றத்தான் அம்மா ஓடி வருகிறார் போலிருந்தது. அம்மாவும் வந்து சேர்ந்துகொண்டதும் மூவரும் சேர்ந்து மரண ஓலம் போட்டார்கள். அப்படியானால் இது சண்டை அல்ல. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளவில்லை. சேர்ந்துதான் கதறுகிறார்கள். நான்கு வயதுச் சிறுவனான எனக்கு எதுவுமே புரியவில்லை. ஏதோவொரு புது விதமான அனுபவம்… பீதி… அந்த நான்கு வயது உலக அனுபவத்தில் அதற்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை. என்னை அப்படியே விட்டுவிட்டு பாட்டியும் அம்மாவும் தலையில் அடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். சிறிது நேரத்தில் வீட்டைச் சுற்றிலும் பலத்த அழுகைச் சத்தம். ஊரே கதறியது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் வீட்டுக்கு வரத் தொடங்கிவிட்டார்கள். எப்போதும் போல் காலையில் பிஞ்சைப் பக்கம் போயிருந்த அப்பா வந்து...

கொரோனாக்கிருமிக்கு முன்பும் அதன் காலத்திலும் அதற்குப் பின்பும் உலகம்: யுவால் நோவா ஹராரியுடன்

யுவால்: இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள் தோலுக்கு மேலேயே நடந்தன. அது இப்போது தோலுக்குக் கீழே போகப் போகிறது. இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால், இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள், ஃபேஸ்புக் அல்லது அமேசான் போன்ற பெருநிறுவனங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அரசாங்கங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அவை இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள், இணையத்தில் எந்தச் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பனவற்றைப் பற்றியவையே. ஆனால் அவை தோலுக்குக் கீழேயோ, உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்கள் மூளைக்கு உள்ளேயும் என்ன நடக்கிறது என்றோ பார்க்கவில்லை. ஆனால் இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்பும் முக்கியமான விஷயம் உடலுக்குள் இருக்கிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறதா, உங்கள் உடல் வெப்பநிலை என்ன, உங்கள் இரத்த அழுத்தம், உங்கள் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது கண்காணிப்பின் தன்மையையே மாற்றுகிறது. இப்போ...