பருவம்

ஒவ்வொரு
கலியாணம்
காதுகுத்து
சாவுக்கும்

அருள்மொழி
கோதை
வேல்முருகன்
எல்லோரும் வந்து சேர்வார்கள்

நாங்கள் பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருப்போம்

அம்மா அப்பாக்களுக்கு மட்டும்
ஆயிரமாயிரம் பிரச்சனைகள் இருக்கும்

இப்போதும்
கலியாணத்தில்
காதுகுத்தில்
சாவுகளில்
சந்தித்துக்கொண்டுதானிருக்கிறோம்

விளையாட வேண்டும் என்றெல்லாம் ஆசையில்லை
நாங்கள் பாட்டுக்கு இருக்க முடிந்தால் போதும்
ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பாடுகள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

சாம, தான, பேத, தண்டம்

"நான் என்னை ஒரு மேதையும் புனித வேசியும் போல் உணர்கிறேன்": அலெஹாண்ட்ரோ ஜோடராவ்ஸ்கிக்குச் சில கேள்விகள்