இடுகைகள்

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 1/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாகக் கட்டுரை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. அப்படியோர் ஆசைப் பட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது அதற்கு ஓராண்டுக்கு முன்னால். மேற்குதான் என்றில்லை; எங்காவது போய் விட்டால் நல்லது என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன் (என் பயணக் கட்டுரைகள் அனைத்தையும் படித்து முடிக்காமல் "வெளிநாட்டு மோகம்" என்று ஓரிரு வார்த்தைகளில் கதையைச் சுருக்கி விடாதீர்கள். அது ஒரு பெரும் கதை. அதைச் சுற்றி எத்தனையோ கிளைக் கதைகள் இருக்கின்றன. அவையனைத்தையும் பற்றிப் பேசத்தான் இந்தத் தொடர்!). நினைத்தபடி எதுவ...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (6/6)

படம்
விடுதி-வெளி மாணவர்கள் பொதுவாகவே எல்லா வகுப்புகளிலும் விடுதி மாணவர்கள் ஒரு குழுவாகவும் வீட்டிலிருந்து தினமும் வந்து செல்லும் வெளி மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பர். இந்தக் குழுவுணர்வுதானே மனித இனத்தையே துண்டாடிப் போட்டுக் கொன்று குவித்துக் கொண்டு இருப்பது. சிலர் மட்டுமே இந்த எல்லைகளைக் கடந்து பழகுவது. எண்ணிக்கையில் குறைவு என்பதால் எங்கள் வகுப்பில் இது சிறிது பரவாயில்லை. சொந்த ஊர் அருகிலேயே இருக்கும் சிலர் சில காலம் இதுவாகவும் சில காலம் அதுவாகவும் இருப்பார்கள் (அதாவது விடுதி மாணவனாகவும் வெளி மாணவனாகவும்). சில விடுதி மாணவர்கள் எப்போதுமே வெளி மாணவர்களோடு சுற்றுவார்கள். அவர்களுடைய வீடுகளிலேயே கிடப்பார்கள். திருச்செந்தூரைச் சொந்த ஊராக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்குத் தெரிந்த உள்ளூர்ப் பெண்கள் எல்லோரையுமே இவர்களுக்கும் தெரிந்திருக்கும். அது போலவே வெளி மாணவர்கள் நிறையப் பேர் எங்களுடனே கிடப்பார்கள். உள்ளே இருக்க முடிந்த நேரம் முழுக்க எங்களுடனே இருப்பார்கள். வார்டன்கள் அழைத்து சிலரைக் கண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒன்னு மண்ணாய் இருப்பார்கள். அப்படி எங்களுடனேயே வந்து...

நகரியம்

படம்
சேவல்களின் கூவலில் விடிந்த காலைப் பொழுதுகள் இப்போது கடிகார மணியோசையில்... கல் தடுக்கி விழுந்தாலும் கதறி ஓடிவரும் பாமர மனிதர்களோடே வாழ்ந்து பழகி விட்டதால் காரிலடிபட்டுக் கிடந்தாலும் அனுதாபமாயோர் அன்னியப் பார்வை வீசிவிட்டுப் பறக்குமிந்தப் படித்த ஞானிகளோடு ஒத்துப் போவது வெகு சிரமம்! நச்சுப் புகைக் காற்றும் இரைச்சலுமான சூழலில் மனிதமும் மாசு பட்டு விட்டது! கிராமியம் கேவலமாய் நகரியம் நாகரிகமாய் சித்தரிக்கப் படும் பொழுதுகளில் சினம் கொண்டு சீரும் மனம் சில நேரங்களில் எதிர்மறையாயும் எண்ணத்தான் செய்கிறது.... என்ன சாதியென்று விசாரணை செய்யும் இழிநிலை இங்கில்லையே! எனவே வாழ்க நகரியம்! * 1998 நாட்குறிப்பில் இருந்து...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (5/6)

படம்
மொழிப் பிரச்சனை தமிழகத்தை வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பகுதிகளாகப் பிரித்தால் அதில் தெற்குதான் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும். வடக்கு தெற்கை விட மோசம் என்றாலும் சென்னை என்கிற ஒரு மாநகரம் இருக்கும் வசதி அதை வடக்கே சரிக்கட்டி விடுகிறது. மேற்குப் பகுதியான கொங்கு மண்டலம் எப்போதுமே வளம் நிறைந்த பகுதி. தொழில் வாய்ப்புகளும் கல்வி வாய்ப்புகளும் மிகச் சிறப்பாக இருக்கும் பகுதி. கிழக்குப் பகுதி என்று ஒன்று இல்லை. அதற்குப் பதில் காவிரி டெல்டாப் பகுதியான திருச்சி-தஞ்சாவூர்ப் பகுதியை எடுத்துக் கொண்டால், அவர்களும் வளமான வாழ்க்கை முறையும் நிறையக் கல்வி வாய்ப்புகளும் கலையார்வமும் கொண்டவர்கள். மதுரையும் அதற்குக் கீழே இருக்கும் தென் பகுதியும் சிறப்பான கல்வி வாய்ப்புகள் அற்ற பெரும்பாலும் கிராமப் புறங்களைக் கொண்ட வறண்ட பகுதி. இந்தியாவிலேயே பெரிய கிராமமான மதுரைதான் அவற்றின் தலைநகரம். மதுரையை என்றுமே மாநகரம் என்ற கணக்கில் சேர்க்க முடியாது. தென் தமிழகத்து மக்கள் அவர்களுக்கென்று பிடிவாதமான ஒரு வாழ்க்கை முறை கொண்டவர்கள். புதுமையை ஏற்றுக் கொள்ளாதவர்கள். ஆங்கிலம் சுட்டுப் போட்டா...

தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்

படம்
இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா? மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்!). வைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் ப...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (4/6)

படம்
விடுதி நாள் விழா & கல்லூரி நாள் விழா விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்டிறுதியில் விடுதி நாள் விழா நடைபெறும். விடுதி நாள் விழா என்பது ஒரு நாள் விழா அல்ல. அந்த வாரம் முழுவதும் நடக்கும் பெருவிழா. வாரம் முழுக்க வித விதமாக நிறையப் போட்டிகள் நடக்கும். அவை எல்லாவற்றிலும் முக்கியமானது கிரிக்கெட் தொடர். உலகக் கோப்பை ரேஞ்சுக்கு பல அணிகள் மோதி அரையிறுதி, இறுதிப் போட்டிகள் எல்லாம் தாண்டி வெல்ல வேண்டும். கபடி, கைப்பந்து, அந்தப் பந்து, இந்தப் பந்து என்று மற்ற பல விளையாட்டுப் போட்டிகளும் நடக்கும். அதற்கெல்லாம் முடிவாக விழா நடக்கும். விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கலும் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த ஆண்டு வெளியேறிச் செல்லும் சிலர் பிரிவுபச்சார உரையாற்றுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதில் ஒருத்தர் கலக்கி எடுப்பார். நான் மூன்றாம் ஆண்டு வரும்போது அந்த ஒருவர் நாமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ திட்டங்கள் போட்டிருந்தேன். கடைசியில் விழாவே நடக்க இல்லை. அது ஏன் என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். அதையும் பேசி விடுவோ...

பொங்கல்த் திருநாள்

படம்
சான்றோரே! சபையோரே! சகோதர நண்பர்களே! அனைவர்க்கும் எந்தன் அன்பான வணக்கங்கள்! மா – பலா – வாழைப் பழங்களும் பாலும் பச்சரிசி வெள்ளமும் செங்கரும்பும் தேங்காயும் இலையும் பாக்கும் இஞ்சியும் மஞ்சளும் எல்லாமும் வைத்து பிரசாதம் படைக்கவும் பலகாரம் சமைக்கவும் ஆசைதான் தமிழனுக்கு... ஆசைதான் தமிழனுக்கு... ஆனால் – கஞ்சிக்கே வழியில்லாதவன் தோசைக்குப் போடுவது கஷ்டம்தானே நிமிர்ந்து வளர வேண்டிய நெல்மணிகள் நிலைகுலைந்து கிடக்கின்றன நம் நாட்டு மாணவர்களைப் போல! தோகை விரித்தாட வேண்டிய கரும்புகள் கவிழ்ந்து கிடக்கின்றன நம்நாட்டுக் கலைஞர்களைப் போல! வளர்ந்திருக்க வேண்டிய வாழைகள் வாடிக் கிடக்கின்றன நம் நாட்டு அறிஞர்களைப் போல! காவிரியைக் காணாமல் தஞ்சையில் நஞ்சைகள் தண்ணீர் தாகத்தில் தவிக்கும் வேளையில்... சகதிக் காடாய் இருக்க வேண்டிய கரிசல் பூமிகள் விரிசல் விழுந்த புழுதிக் காடாய்க் காயும் வேளையில்... நமக்காக வேண்டாம் நன்றிக்காகக் கொண்டாடுவோம்! போகியில் பொசுக்க பழைய உடமைகள் இல்லைதான் பாழடைந்த குணங்கள் உண்டே! பொங்கலுக்கு உட...