ஐ.மு.கூ-2: தேறும் அமைச்சர்கள்
எல்லாக் கட்சிகளிலும் உள்ள பிடித்த தலைவர்கள் பற்றி எழுதலாம் என்றுதான் எண்ணினேன் முதலில். இடுகையின் அளவைச் சிறிதாக்கிக் கொள்ள வேண்டி ஆளும் கூட்டணியின் முக்கியக் கட்சியான காங்கிரசின் முக்கியத் தலைகள் பற்றி மட்டும் பேசலாம் என நினைக்கிறேன் இவ்விடுகையில். பிறிதொரு நாளில் மற்ற கட்சிகளின் தலைகள் பற்றியும் பேசலாம் கண்டிப்பாக. சரி, கேள்விக்கு வருவோம். இப்போதைய அரசில் உள்ளோரில் தேறுவது யார் யார்? தேறுவது போலத் தெரிந்தாலும் தேறாதோர் யார்? அவர்களைப் பற்றி மட்டும் இவ்விடுகையில் பேசுவோம். மற்றோரை விட்டு விடலாம். அவர்கள் யாவரும் சராசரிகள் அல்லது பெரிதாக நம்முடைய கவனம் தேவையில்லாதவர்கள். வெறும் அரசியல்வாதிகள்; தலைவர்கள் அல்லர். உங்கள் கருத்துரைகளைப் பொறுத்து இதைத் திருத்தவும் தயாராக இருக்கிறேன். சொல்லவே வேண்டியதில்லை. முதலில் வருவது பிரணாப் முகர்ஜி. அவர் ஒரு சகலகலா வல்லவர். அவருடைய சமகாலத்தவர்களில் இவர் ஒருவர்தான் இன்றும் உருப்படியாக நிலைத்திருப்பவர். அவருடைய சமகாலத்தோர் என்று நான் சொல்வது அர்ஜுன் சிங்குகள், என். டி. திவாரிகள், சிவராஜ் பாட்டில்கள், நட்வர் சிங்குகள் போன்றோர். இவர் அடு...