இடுகைகள்

டிசம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்

படம்
இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா? மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்!). வைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் ப...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (4/6)

படம்
விடுதி நாள் விழா & கல்லூரி நாள் விழா விழாக்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக ஆண்டிறுதியில் விடுதி நாள் விழா நடைபெறும். விடுதி நாள் விழா என்பது ஒரு நாள் விழா அல்ல. அந்த வாரம் முழுவதும் நடக்கும் பெருவிழா. வாரம் முழுக்க வித விதமாக நிறையப் போட்டிகள் நடக்கும். அவை எல்லாவற்றிலும் முக்கியமானது கிரிக்கெட் தொடர். உலகக் கோப்பை ரேஞ்சுக்கு பல அணிகள் மோதி அரையிறுதி, இறுதிப் போட்டிகள் எல்லாம் தாண்டி வெல்ல வேண்டும். கபடி, கைப்பந்து, அந்தப் பந்து, இந்தப் பந்து என்று மற்ற பல விளையாட்டுப் போட்டிகளும் நடக்கும். அதற்கெல்லாம் முடிவாக விழா நடக்கும். விழாவில் பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற போட்டிகளுக்குப் பரிசுகள் வழங்கலும் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த ஆண்டு வெளியேறிச் செல்லும் சிலர் பிரிவுபச்சார உரையாற்றுவார்கள். ஒவ்வோர் ஆண்டும் அதில் ஒருத்தர் கலக்கி எடுப்பார். நான் மூன்றாம் ஆண்டு வரும்போது அந்த ஒருவர் நாமாக இருக்க வேண்டும் என்று எவ்வளவோ திட்டங்கள் போட்டிருந்தேன். கடைசியில் விழாவே நடக்க இல்லை. அது ஏன் என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. இன்னும் சில வாரங்கள் பொறுத்திருங்கள். அதையும் பேசி விடுவோ...

பொங்கல்த் திருநாள்

படம்
சான்றோரே! சபையோரே! சகோதர நண்பர்களே! அனைவர்க்கும் எந்தன் அன்பான வணக்கங்கள்! மா – பலா – வாழைப் பழங்களும் பாலும் பச்சரிசி வெள்ளமும் செங்கரும்பும் தேங்காயும் இலையும் பாக்கும் இஞ்சியும் மஞ்சளும் எல்லாமும் வைத்து பிரசாதம் படைக்கவும் பலகாரம் சமைக்கவும் ஆசைதான் தமிழனுக்கு... ஆசைதான் தமிழனுக்கு... ஆனால் – கஞ்சிக்கே வழியில்லாதவன் தோசைக்குப் போடுவது கஷ்டம்தானே நிமிர்ந்து வளர வேண்டிய நெல்மணிகள் நிலைகுலைந்து கிடக்கின்றன நம் நாட்டு மாணவர்களைப் போல! தோகை விரித்தாட வேண்டிய கரும்புகள் கவிழ்ந்து கிடக்கின்றன நம்நாட்டுக் கலைஞர்களைப் போல! வளர்ந்திருக்க வேண்டிய வாழைகள் வாடிக் கிடக்கின்றன நம் நாட்டு அறிஞர்களைப் போல! காவிரியைக் காணாமல் தஞ்சையில் நஞ்சைகள் தண்ணீர் தாகத்தில் தவிக்கும் வேளையில்... சகதிக் காடாய் இருக்க வேண்டிய கரிசல் பூமிகள் விரிசல் விழுந்த புழுதிக் காடாய்க் காயும் வேளையில்... நமக்காக வேண்டாம் நன்றிக்காகக் கொண்டாடுவோம்! போகியில் பொசுக்க பழைய உடமைகள் இல்லைதான் பாழடைந்த குணங்கள் உண்டே! பொங்கலுக்கு உட...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (3/6)

படம்
ரூபஸ் அண்ணன்  ரூபஸ் அண்ணன் ஆங்கில மாணவர். கொள்கையால் ஈர்க்கப் பட்டு ஏற்பட்ட கூட்டணி. முதல் நாளே நமக்கு ஏற்ற ஆள் யாராவது இருக்கிறார்களா என்று தேடுவோமே அப்படித் தேடித் பிடித்துக் கொண்ட ஆள். அவரால் என்னுடைய பல அடிப்படைக் குணாதிசயங்களே மாறியது. எளிதில் எதிரிகளை உருவாக்கிக் கொள்ளக் கூடிய ஆளாக இருந்தவன் நான். அவரைப் பார்த்த பின்புதான் எல்லோருடனும் நல்ல பிள்ளையாக இருப்பது ஒன்றே நாம் சாதிக்க விரும்பும் சாதனைகளை எளிதாக அடைவதற்கான உருப்படியான வழி என்பதைக் கற்றுக் கொண்டேன். அது அவருக்கு இயல்பாகவே வந்தது. அதைப் பார்த்து முயன்று மாற்றிக் கொண்டேன் நான். அவரிடம் நிறைய அரசியல் ஆர்வம் இருந்தது. எனக்கும் அது இருந்தது. ஆனால், நம்ம அரசியல் வெறும் பேச்சுக்கு மட்டும்தான். அவர் அப்போதே நிறையக் களப் பணிகள் செய்வார். அதனால் அவரைக் கூடுதலாகப் பிடிக்கும். பொதுவாகவே கல்லூரி வயதில் தண்ணி-தம் போன்ற பழக்கங்கள் இருப்பவர்கள்தான் சக மாணவர்களிடம் எளிதில் பெரிய ஆளாக முடியும். அப்படி எல்லாம் இல்லாமல் இவர் எப்படி அவர்களுடைய செட்டில் இப்படி மதிக்கப் படுகிறார் என்று ஆச்சரியப் பட்டிருக்கிறேன். எல்லோருமே அவரை "த...

பிள்ளைப் பித்து

படம்
திருமணத்தன்று போட்ட வட்டம் இன்னொரு பிறவி வந்திறங்கும் நாளில் இன்னும் சுருங்குகிறது திருமணம் என்பது திணிக்கப் பட்ட சுயநலத்தின் திடீர் ஆரம்பம் பிள்ளைப் பேறோ பிரக்ஞையற்ற சுயநலத்தின் பிள்ளையார் சுழி விரிந்த உலகத்தின் வீதியே பற்றாது என்பவரையும் வீட்டுக்குள் சுருக்கி அடைக்கும் விந்தை மாற்றம் அறுபது நாட்களில் அழியாத ஆசை மண்ணுலகையே வெறுத்து மரணத்தின் மடிவரை போய் மாளத் துணிந்தோரையும் மீள வைத்து வாழ நீட்டிக்கும் மந்திரம் எரிகிற வீட்டை எட்டிக் கூடக் காண இயலாதவரையும் இழுத்து வரவழைத்து எப்பாடு பட்டேனும் எடுத்துச் செல்ல வைக்கும் எலும்புக் காந்தம் 'உயிரையும்' கொடுப்பேன் 'உயிரையே' கொடுப்பேன் என்பதெல்லாம் இளமைக் காலத்து ஏமாற்றுப் பேச்சு பித்து நிலைப் பிதற்றல் அது பிராயப் பித்து! பிள்ளை ஒன்றைப் பெற்று விட்டு வந்து பேசுங்கள்... 'உயிர்' கொடுப்பேன் என்றோ 'உயிரைக்' கொடுப்பேன் என்றோ உம்... ஏ... என்கிற உணர்ச்சி அழுத்தங்களையெல்லாம் சொல்லில் காட்டாமல் செயலில் காட்டத் துணிவீர்கள்... இதுவும் ஒருவிதப் பித்து நிலைதான்... இத...

அறிஞத் தமிழ்

ஒவ்வொரு மொழியிலும் ஏகப்பட்ட கிளைமொழிகளும் வட்டார வழக்குகளும் உள்ளன. தமிழிலும் அப்படிப் பல தமிழ்கள் இருக்கின்றன. சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், தஞ்சைத் தமிழ், நெல்லைத் தமிழ், குமரித் தமிழ் போன்று பல தமிழ்கள். இவை தவிர்த்து, சில இனத்தவருக்கென்று ஒவ்வொரு தமிழ் இருக்கிறது. நெல்லை-குமரித் தமிழ்களுக்குள்ளேயே நாடார்களுக்கு என்று சில தனித்துவமான வட்டார வழக்குகள் இருக்கின்றன. கொங்குத் தமிழுக்குள்ளேயே கவுண்டர்களுக்கென்று ஒரு வட்டார வழக்கு இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க இருக்கும் பிராமணர்களுக்கென்று ஒரு கிளைமொழி இருக்கிறது. பாலக்காட்டு ஐயர்களுக்கென்று வேறொரு கிளைமொழி இருக்கிறது. தமிழக-கேரள எல்லைக்கோடு கிழிக்கப் பட்ட பின் பாலக்காட்டு ஐயர்கள் பேசும் தமிழ் மென்மேலும் மலையாளப் பட்டு விட்டது. அது போலவே மைசூர்-மண்டியம் பகுதிகளில் இருக்கும் ஐயங்கார்கள் ஒரு கன்னடம் கலந்த தமிழ் வைத்திருக்கிறார்கள். அவர்களும் முடிந்த அளவு வேகமாகத் தம்மைக் கன்னடப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். எல்லைக்கு அந்தப் பக்கந்தான் எதிர்காலம் என்று உறுதியாகி விட்டபின் அதற்கேற்றபடி ம...

இளமையா? முதுமையா?

படம்
வாஜ்பாய், குஜ்ரால் - இது போன்று எத்தனையோ பெரும் தலைவர்கள் இளமைக் காலங்களில் கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கி, பின்பு மனம் மாறியவர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். "இளமைப் பருவம் உணர்ச்சி மிக்க பருவம். அந்த வயதில் அதிரடியான முடிவெடுப்பதும், தீவிரமான செயல் வெறியும் இயல்பே. ஆனால், முதியவர்கள்தாம் நிதானமாகச் சிந்தித்து, தெளிவான முடிவெடுக்கும் திறன் படைத்தவர்கள். வாழ்வின் நெளிவு சுளிவுகளை அறிந்தவர்கள். மனம் பக்குவப் பட்டவர்கள்!" என்றொரு கூட்டம் கூறுகிறது. ஆனால், என்னைப் பொருத்த மட்டில், "மனம் பக்குவப் பட்டு விட்டது!" என்பதன் பொருள் , "மனம் மழுங்கி விட்டது!" என்பதே. சாக்கடைச் சமூகத்தின் நாற்றத்தைப் போக்க நினைக்கும் இளைஞன் ஒருவன், சுயநலச் சிந்தனைகளிலும் அவநம்பிக்கையிலும் சிக்கித் தானும் சாக்கடையோடு ஐக்கியமாகி விடுகிற முதுமைத் தனம் பக்குவத்தாலா? மழுங்கலாலா? "இருபது வயதில் கம்யூனிஸ்டாக இருப்பவனும் ஐம்பது வயதில் கம்யூனிசத்தை வெறுப்பவனுமே விபரமானவன்!" என்கிற மாதிரி யாரோ சொன்னதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். காரணம்? இருபது வயதில் தீமைகளைக் கண்ட...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (2/6)

படம்
இதர சோலிகள் நான் முன்பு சொன்னது போல, எங்கள் கல்லூரி படிப்பில் மட்டுமல்லாது எல்லாத்திலும் பட்டையைக் கிளப்பும் கல்லூரி. விளையாட்டிலும் நிறைய வீரர்களை உருவாக்கிய கல்லூரி. பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது. அதற்கென்று ஒரு மன்றம் இருக்கிறது. இலக்கிய ஈடுபாடுகள் உள்ளோருக்கும் ஓரளவு தீனி போடும் சூழல் அங்கிருந்தது. எனக்கும் கொஞ்சம் கவிதை - கதை எழுதும் வேலைகளில் ஆர்வம் இருந்தது. இது போன்ற வேலைகளில் ஆர்வம் இருக்கும் எல்லோருமே எங்கு சென்றாலும் எடுத்தவுடனேயே தன் திறமையை எல்லோருக்கும் காட்டி விட வேண்டும் என்று வாய்ப்புக்காகக் காத்திருப்பார்கள். வந்தவுடன் கவ்விப் பிடித்துத் தான் யார் என்பதைக் காட்டி விடுவார்கள். அப்படி வாய்ப்பு வராவிட்டாலும் எல்லோரிடமும் தன் திறமை பற்றி ஊதி ஊதிப் பெரிதாக்கிப் பேசிக் கொண்டிருப்பார்கள். நானும் அதைச் செய்தேன். பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் போது கவிதை என்ற பெயரில் நாலு வரியில் எதையோ எழுதிக் கொடுக்க அதைப் பள்ளியின் ஆண்டிதழில் வெளியிட்டு விட்டார்கள். நாலு வரி எழுதிய நாமே இந்த ஆட்டம் போட்டோமே, நா...

கல்லூரி வாழ்க்கை - ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர் (1/6)

படம்
கல்லூரி வாழ்க்கை எல்லோருக்குமே ஸ்பெஷல்தான். அதுவும் விடுதியில் இருந்து படிப்போருக்கு சூப்பர் ஸ்பெஷல். எனக்கு சூப்பர் ஸ்பெஷல். எங்கள் ஊரும் (நாகலாபுரம்) திருச்செந்தூரும் ஒரே மாவட்டத்தில்தான் இருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம். ஆனாலும் நூறு கிலோ மீட்டர் தொலைவு. நாங்கள் வட எல்லை. திருச்செந்தூர் தென் எல்லை. பல பஸ்கள் மாறி வர வேண்டும். குறைந்தது இரண்டு; அதிக பட்சம் நான்கு பஸ்கள். நாகலாபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் அல்லது நாகலாபுரம்-விளாத்திகுளம்-எட்டையபுரம்-தூத்துக்குடி-திருச்செந்தூர் ஆகிய வழிகளில் வரலாம். எப்படி வந்தாலும் நான்கு மணி நேரம் கண்டிப்பாக ஆகும். அதில் பெரிதளவில் மாற்றம் இராது. எந்தக் குறிப்பிட்ட வழியையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் கிடைக்கிற பஸ்ஸில் ஏறி விடுவது உத்தமம். நாங்கள் உத்தமர்கள் என்பதால் அப்படியே செய்து விடுவோம். நாங்கள் என்றால்? நான், மாரிச்சாமி, கண்ணபிரான் ஆகிய மூவர். முதல் வருடம் நான் தனியாகத்தான் இருந்தேன். மாரிச்சாமியும் கண்ணபிரானும் என்னுடைய இரண்டாம் ஆண்டில் வந்து சேர்ந்த ஜூனியர்...