இடுகைகள்

ஜனவரி, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

வாசிப்பு குறைவுதான் எனினும் இதுவரை வாசித்த தமிழ் நூல்களில் சிறந்த நூல் இதுதான் என்று சொல்லலாம். இது எவ்வளவு சீக்கிரம் மாறும் என்று தெரியவில்லை. எவ்வளவு வேகமாக வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மாறும் என நினைக்கிறேன். ஜெயகாந்தன் தன் புதினங்களிலேயே தனக்கு அதிகம் பிடித்தது என்று சொன்னது இதைத்தான் என்பார்கள். ஜெயகாந்தனின் வாசகர்கள் நிறையப் பேரும் இதைச் சொல்வதுண்டு. ஓரளவுக்கு நகரப் பின்னணியில் இருந்து வருபவர்கள், பெண்களுக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்', ஊரகப் பின்னணியில் இருந்து வருபவர்கள், இளைஞர்களுக்கு 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்று மேலோட்டமாகச் சொல்லலாம். மொத்தக் கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் பத்துப் பேர்தான் இருக்கும். அவற்றில் ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கிச் செதுக்கிச் செய்தது போல இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஒரு கோட்டில் வந்து இணைத்த விதம் பிசிறில்லாமல் இருந்தது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே இதை எழுதும் போது ஜெயகாந்தன் ஏதோவொரு தேவபானம் அருந்திவிட்டுத்தான் இப்படியொரு கதையை எழுதியிருக்க முடியும் என்று தோன்றியது ("ஆமாமா... அவருக்கு அந்தப் பழ...

கி.மு. கி.பி. - மதன்

தமிழின் தலைசிறந்த நூல்கள் வரிசையில் 'கி.மு. கி.பி.' எப்போதும் மேலே இருக்கிறது. குறிப்பாக புனைவிலி (non-fiction) வகையில் இதுதான் தமிழில் எழுதப்பட்ட சிறந்த நூல் என்று இணையம் கொண்டாடுகிறது. இந்த நூல் எது பற்றிப் பேசுகிறது என்று பார்த்தால், இது ஒரு தமிழ் 'சேப்பியன்ஸ்' (Sapiens) எனலாம். மனித குலம் தோன்றியதிலிருந்து நிகழ்ந்துள்ள பெரும் மாற்றங்கள் பற்றியும் நாகரிகங்கள் பற்றியும் பேசுகிறது. பெயர் 'கி.மு. கி.பி.' என்றிருந்தாலும் இந்த நூலில் அதிகம் பேசப்படுவது கி.மு.வே. கி.பி. அதிகம் இல்லை. கடைசியில் சில பக்கங்கள் மட்டுமே. ஏற்கனவே நிறையப் பேர் சொல்வது போல, மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றிய உயிரினம் என்றும் அதுவும் குறிப்பாக முதலில் தோன்றியது பெண்தான் என்றும் தொடங்குகிறார். எகிப்திய நாகரிகம், பாரசீக நாகரிகம், கிரேக்க நாகரிகம், இந்திய நாகரிகம் என்று பல்வேறு பண்டைய நாகரிகங்கள் பற்றியும் அவை மனிதகுலத்துக்குச் செய்த பெரும் உதவிகள் பற்றியும் பேசுகிறது. முதலில் கடலில் பாக்டீரியா உருவாகிறது, அடுத்து மீன்கள், அடுத்து நிலத்தில் ஊர்வன, இப்படியே போய் குரங்கும் குரங்கிலிருந்து மனிதனும் உ...

மெலூஹாவின் அமரர்கள் - அமிஷ் திரிபாதி

சிவபெருமான் மனிதனாக இருந்தால் எப்படி இருந்திருப்பார் என்கிற கற்பனையில் எழுதப்பட்டிருக்கும் புதினம். இதையடுத்து இதே வரிசையில் மேலும் இரு நூல்கள் வந்தன. கைலாயப் பகுதியில் பிறந்து வளர்ந்த ஒரு காட்டுவாசியான சிவன் கீழே இறங்கி, காஷ்மீர் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்குள் வந்து, ராமராஜ்யத்துக்குப் பின் ஒரு நல்ல ராஜ்யம் அமைப்பது போல வந்து வேறு பல வேலைகளும் செய்யப்போகிற கதை போல இருக்கிறது. ராமர் வாழ்ந்த காலத்துக்குப் பின்பு சிவன் வாழ்ந்தது போலக் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது. சிவனே கூட ராமனை வணங்குவது போன்ற ஒரு காட்சி கூட வருகிறது. நம்மூர்ச் சைவர்களுக்கு இது கசக்கலாம். இதைவிட சுவாரசியமான விஷயம், சிவனே ஒரு கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கிறார். கைலாயத்திலிருந்து ஸ்ரீநகர் வழியாக மெலூஹாவுக்குள் வருகிறார்கள் சிவனும் அவருடைய தோழர்களும். மெலூஹா என்பது இந்தியாவுக்கு மத்திய கிழக்குப் பகுதிகளில் இருந்த ஒரு பெயர் எனப்படுகிறது புதினத்துக்கு வெளியில் செய்த தேடலில். அந்த நாடு நீலக் கழுத்துடைய ஒருவர் வந்து தம்மைத் தம் எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார் என்று காத்திருக்கிறது. மெலூஹா சூர்யவம்சிகளின் நா...

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

தமிழில் எழுதியவர்களிலேயே தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான் என்று சொல்லப்படுவதைப் போல இதுவரை தமிழில் எழுதப்பட்ட புதினங்களிலேயே சிறந்த புதினம் இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. தீவிர வாசிப்புக்குள் சென்றுவிட்டவர்கள் இதை மறுக்கக் கூடும். தீவிர வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்குத்தான் ஜெயகாந்தன் எனக் கூடும். அந்த நிலையில்தான் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதால் ஜெயகாந்தன்தான் சிறந்த எழுத்தாளர் என்பதும் மக்கள்மயமான (democratic) ஒரு கருத்துதான். சுஜாதாதான் அது என்பவர்களை அதற்கும் முந்தைய கட்டம் என்பது போல், ஜெயகாந்தன்தான் அது என்பவர்களையும் படிநிலையில் கீழே வைத்துப் பேசுபவர்கள் உண்டு. வணிக எழுத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் நிறையப் பேரை வாசிக்க வைத்த பெருமை சுஜாதாவுக்கே சேரும். அது போலத்தான் ஜெயகாந்தனும். ஒரு தலைமுறையையே இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்த பெருமை அவரையே சேரும். கிட்டத்தட்ட அவருக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்கள் எல்லோருமே அவரால் ஊக்கம் பெற்றவர்களே. அதனால்தான் தமிழில் இதுவரை ஞான பீடம் பெற்ற இரண்டே இருவரில் அவரும் ஒருவர். ஞான பீடம் ஒன்றே தரத்தின் க...